search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல வாழ்வு மையம்"

    • ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது
    • அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கு தொடங்கி வைத்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பிஞ்சி பகுதியில் புதிதாக ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்புற நல வாழ்வு மையத்தை நேற்று மாலை தமிழ்நாடு முதல் அமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    இதனைதொடர்ந்து இந்த புதிய நகர்புற நலவாழ்வு மைய கட்டிடத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ருத்ரகோட்டி, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், கோபிகிருஷ்ணன், ஜெயசங்கீதா அசேன் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார்
    • செவிலியர், சுகாதாரஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

     கள்ளக்குறிச்சி:

    மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் தலாரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 500 நகர்புற நல வாழ்வு மையங்களை தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட விளாந்தங்கல் சாலையில் நகர்ப்புற நல வாழ்வு மையத்தினை சென்னை தலைமை ச்செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து குத்துவிளக்கை ஏற்றி வைத்து நகர்ப்புற நல வாழ்வு மையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும் பொது மக்களுக்கு வழங்க ப்படும் மருத்துவ சேவையை பார்வையிட்டனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,இந்த நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் ஒரு மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதாரஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

    இந்த மையத்தில்கர்ப்ப கால மற்றும் பிரசவ கால சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நல சேவைகள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்திற்கான சேவைகள், குடும்ப நலம், கருத்தடை, பேறுகால சேவைகள், தேசியசுகாதார திட்டங்களின் பொதுவான தொற்று நோய்களுக்கான சிகிச்சைகள், வெளிநோயாளிகளுக்கான சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளும் 63 ஆய்வக பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்றார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள்,கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் சுப்பராயலு, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ராஜா, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன், தியாகதுருகம் ஒன்றிய குழுதலைவர் தாமோதிரன், சின்னசேலம் ஒன்றிய குழு தலைவர் சத்தியமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை நகர்புற நல வாழ்வு மையத்திற்கு வந்தார். அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தரமான சிகிச்சை அளிக்கும் படி டாக்டர்கள், நர்சுகளுக்கு அறிவுறுத்தினர். அப்போது கலெக்டர் ஷ்ரவன் குமார், உதய சூரியன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நகர்ப்புற நல வாழ்வு மையம் ஓராண்டாக பயன்பாட்டிற்கு வரவில்லை.
    • சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங் களில் இலவச அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சோதனை, தாய் சேய் சுகாதார சேவைகள் மற்றும் அடிப்படை மருத்துவ சேவைகளுக்காக குடியிருப்புகளுக்கு அருகில் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி ஸ்ரீவில்லி புத்தூர் நகராட்சி இடைய பொட்டல் தெருவில் பொது மக்களின் வசதிக்காக நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைப்பதற்கு 2021 -22 நிதியாண்டிற்கான மத்திய நிதி குழு மானிய நிதியில் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்காக இடையபொட்டல் தெருவில் உள்ள நகராட்சி சுகாதார வளாகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டது.

    இந்த நிலையில் கட்டு மான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், ஓராண்டாகியும் நல வாழ்வு மையம் திறக்கப்படாமல் உள்ளது. இதனை உடனடி யாக திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×