search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்குழித் திருவிழா"

    • பூக்குழி நடைபெறும் திடலில் வேதம் முழங்க அக்னி வளர்க்கப்பட்டது.
    • பக்தர்கள் சப்பரத்திற்கு முன்னே 'கோவிந்தா' கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    சிவகிரி:

    சிவகிரியில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 8 மணிக்கு கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள பூக்குழி நடைபெறும் திடலில் வேதம் முழங்க அக்னி வளர்க்கப்பட்டது.

    சப்பரத்தில் எழுந்தருளி

    மாலை 5.30 மணிக்கு கோவிலில் இருந்து திரவுபதி அம்மன், கிருஷ்ணன், அர்ச்சுனர் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு எழுந்தருளி சப்பரத்தில் அமர்ந்து புறப்பட்டு சென்றனர். பூக்குழி இறங்குவதற்காக 41 நாட்கள் விரதம் இருந்து வந்த பக்தர்கள் சப்பரத்திற்கு முன்னே கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    சப்பரம் முத்துமாரியம்மன் கோவில் தெரு, முக்கிய ரத வீதிகள், சிவராமலிங்காபுரம் தெரு வழியாக வலம் வந்தனர். சப்பரம் 6.15 மணிக்கு கோவிலுக்கு முன்பாக சென்றவுடன் கோவில் பூசாரி மாரிமுத்து முதன்முதலாக பூக்குழி இறங்கினார். இதனைத் தொடர்ந்து 150 பெண்கள் உட்பட 736 பேர் பூக்குழி இறங்கினர்.

    கலந்து கொண்டவர்கள்

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் கண்ணதாசன், நிர்வாக அதிகாரி கேசவராஜன், கணக்கர் குமார், காப்பு கட்டிகள் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள், ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

    பூக்குழித் திருவிழாவைக் காண சிவகிரி, புளியங்குடி, தளவாய்புரம், வாசுதேவ நல்லூர், ராஜபாளையம், ராயகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.

    முன்னதாக புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக் தலைமையில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர். வாசுதேவநல்லூர் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் பொறுப்பு கருப்பையா தலைமையில் தீயணைப்பு துறையினரும், சிவகிரி பேரூராட்சிமன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்த ரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் வெங்கடகோபு, கவுன்சிலர்கள், கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன், கணேசன், தலையாரிகள் வேல்முருகன், அழகுராஜா, வனத்துறையினர் மற்றும் பலர் பூக்குழித் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    ×