என் மலர்
நீங்கள் தேடியது "பழங்குடியினர் சான்றிதழ்"
- 54 நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வந்து ஜாதி சான்றிதழ் வழங்க இணையதளத்தில் பதிவு செய்தனர்.
- தாசில்தார் ராஜேஸ்வரி, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் 54 நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வந்து ஜாதி சான்றிதழ் வழங்க இணையதளத்தில் பதிவு செய்தனர்.
பூஞ்சேரி பகுதிக்கான இந்த சிறப்பு முகாமில் செங்கல்பட்டு கோட்டாட்சியர் இப்ராஹீம், திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.