என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்காட் போலண்ட்"
- 4-வது டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்கள் கொண்டுவரப்பட்டள்ளது.
- காயம் காரணமாக விலகி ஹசில்வுட்டுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் போலண்ட் இடம் பெற்றுள்ளார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.
3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போனில் தொடங்குகிறது.
இந்த போட்டியில் விளையாடும் ஆடும் லெவன் அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அணியில் 2 மாற்றங்கள் கொண்டுவரப்பட்டள்ளது. அதில் காயம் காரணமாக விலகி ஹசில்வுட்டுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் போலண்ட் இடம் பெற்றுள்ளார்.
அதேபோல் தொடக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனிக்கு பதிலாக 19 வயது இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
4-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா வீரர்கள் விவரம்:-
உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.
- 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்காட் போலண்ட் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
- இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை ( புதன் கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை நடக்கிறது. ஐ.சி.சி. கோப்பையை கைப்பற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலண்ட் ஆடும் லெவனில் இருப்பார் என அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்காட் போலண்ட் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.