என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் சிகிச்சை"

    • மயில்சாமி பராமரிப்பில் இருந்து கொண்டு, கால்நடைகளை வளர்த்து வந்தார்.
    • காளியப்பன் கீழே விழுந்து நெஞ்சு, நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பெரிய கள்ளிப்பட்டி கோட்டை புதூரை சேர்ந்த வர் காளியப்பன்(70). இவர், அவரது மகன் மயில்சாமி பராமரிப்பில் இருந்து கொண்டு, கால்நடைகளை வளர்த்து வந்தார்.

    கடந்த மாதம் 28-ந் தேதி காளியப்பன் அவரது 2 மாடு கன்றுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். அப்போது, கன்று வேகமாக கயிறுடன் இழுத்து சென்றதில், காளியப்பன் கீழே விழுந்து நெஞ்சு, நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து காளியப்பன் மீட்கப்பட்டு அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நேற்று பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×