என் மலர்
நீங்கள் தேடியது "மொயீன் அலி"
- ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார்.
- இந்த தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என இங்கிலாந்து நினைக்கிறது.
இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
கிரிக்கெட் வரலாற்றில் இந்த தொடர் மிகவும் முக்கியமான தொடராக கருதப்படும். இதனால் இந்த தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என இங்கிலாந்து நினைக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு நாதன் லைன் என்ற சிறந்த சுழற் பந்துவீச்சாளர் உள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இருந்து வந்தார். அவர் ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்து வந்தது.
இந்த ஆஷஸ் தொடரில் அவரை விளையாட வைப்பதற்காக அவரது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அவரிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. மேலும் அவரிடம் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த நிலையில் மொயீன் அலி மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாட சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
மொயீன் அலி பந்துவீச்சில் தாக்கம் ஏற்படுத்துவதுடன் சிறந்த முறையில் பேட்டிங் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஓய்வில் இருந்து வெளிவர சொல்லி கேப்டன் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்த காரணத்தால் விளையாட வந்தேன்.
- இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன்.
லண்டன்:
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2 - 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் தான் தனது கடைசி டெஸ்ட் போட்டி என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நல்லதொரு 'கம்பேக்' தொடராக இது அமைந்தது. மறக்கமுடியாத தொடராகவும் அமைந்தது. ஓய்வை அறிவித்த பிறகு மீண்டும் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவேன், விக்கெட் வீழ்த்துவேன் என நினைக்கவில்லை.
ஓய்வில் இருந்து வெளிவர சொல்லி கேப்டன் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்த காரணத்தால் விளையாட வந்தேன். ஆனால், இதுவே எனது கடைசி டெஸ்ட் போட்டி. மீண்டும் ஸ்டோக்ஸ் மெசேஜ் செய்தால் அதனை டெலிட் செய்து விடுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 2021-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்தார். ஆனால், இங்கிலாந்து கேப்டனின் வேண்டுகோளையடுத்து கடந்த ஜூன் மாதம் ஆஷஸ் தொடருக்காக மொயீன் அலி மீண்டும் அணிக்கு திரும்பினார். 36 வயதான மொயின் அலி, 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 3,094 ரன்கள் குவித்துள்ளார். 204 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு மொயின் அலி உதவினார். தற்போது இரண்டாவது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார்.
- இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை.
- ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன்.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி 2021-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் ஆகியோரது வற்புறுத்தலை ஏற்று டெஸ்ட் ஓய்வில் இருந்து விடுபட்டு சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். 2-2 என்று சமனில் முடிந்த இந்த தொடரின் கடைசி டெஸ்டில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் டெஸ்டில் இருந்து மீண்டும் விடைபெற்றார்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வரை தொடர்ந்து டெஸ்டில் விளையாடுவது குறித்து பரிசீலிக்கும்படி பயிற்சியாளர் மெக்கல்லம் அவரை மீண்டும் கேட்டு இருந்தார். இந்த முறை அவரது வேண்டுகோளை ஏற்க 36 வயதான மொயீன் அலி மறுத்து விட்டார்.
இது குறித்து மொயீன் அலி கூறுகையில் 'இந்தியாவுக்கு நான் சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. எனது முடிவு அவர்களுக்கு (ஸ்டோக்ஸ், மெக்கல்லம்) தெரியும். அற்புதமான ஆஷஸ் வெற்றியுடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்து விட்டேன்.
எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் ஏற்றம், இறக்கங்கள் நிறைந்தது. நான் அதை மாற்ற முடியாது. ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன். இனி வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்துவேன். 20 ஓவர் லீக் போட்டிகளிலும் விளையாடுவேன்' என்றார்.
- டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் மொத்தமாக 366 விக்கெட்டுகளை மொயீன் அலி வீழ்த்தியுள்ளார்.
- மொயீன் அலி டெஸ்ட் போட்டிகளில் 5 சதமும் ஒருநாள் போட்டிகளில் 3 சதமும் அடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.
2014 முதல் அவர் இங்கிலாந்துக்காக 68 டெஸ்ட், 138 ஒரு நாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஜூன் மாதம் அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடினார்.
மொயீன் அலி டெஸ்ட் போட்டிகளில் 5 சதமும் ஒருநாள் போட்டிகளில் 3 சதமும் அடித்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் மொத்தமாக 366 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.
2019ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும், 2022ல் டி20 உலகக் கோப்பையையும் வென்ற இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இடம் பெற்றிருந்தார்.
2022 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 16 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
ஓய்வு பெறுவது தொடர்பாக பேசிய மொயீன் அலி, "எனக்கு 37 வயதாகிறது, இந்த மாத ஆஸ்திரேலிய தொடருக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இது அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவதற்கான நேரம். தொடர்ந்து லீக் கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடுவேன். எதிர்காலத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றவும் திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
- முதல் 10 ஓவருக்குப் பிறகு பவர்பிளே கோட்டிற்கு வெளியே 4 பீல்டர்கள் நிற்க வேண்டும் என்பது கொடூரமான விதி.
- பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கும்போது, ரிவர்ஸ்-ஸ்வீப்ஸ் மூலம் பவுண்டரி அடித்து விடுகிறார்கள்.
டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று கிரிக்கெட் வடிவில் விளையாடுவதற்குன ஒருநாள் கிரிக்கெட் வடிவம் மோசமானது என மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மொயீன் அலி கூறியதாவது:-
உலகக் கோப்பைகள், சாம்பியன்ஸ் டிராபி ஆகிவற்றை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட் வடிவம் ஏறக்குறைய செத்துவிட்டது. இது விளையாடுவதற்கான மோசமான வடிவம். இதற்கு ஏராளமான காரணம் இருப்பதாக நினைக்கிறேன்.
ஒருநாள் போட்டி வடிவத்திற்கான விதி பயங்கரமானதாக உள்ளது. முதல் பவர்பிளேய்க்குப் பிறகு 4 வீரர்கள்தான் பவர்பிளே கோட்டிற்கு வெளியே நிற்க வேண்டும். விக்கெட் எடுப்பதற்கும், எந்தவிதமான நெருக்கடிகை ஏற்படுத்துவதற்கும் இது மிகவும் பயங்கரமான விதி. இதனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் 60, 70 சராசரி வைத்துள்ளனர்.
தற்போது 11 முதல் 40 ஓவரை வரை நான்கு பீல்டர்கள் மட்டுமே பவர்பிளே கோட்டிற்கு வெளியே இருப்பதால், நீங்கள் ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்து வீசும்போது அவருக்கு சற்று நெருக்கடி கொடுக்கும்போது, அவர் ஜஸ்ட் ரிவர்ஸ்-ஸ்வீப்ஸ் செய்கிறார். இதனால் ஒரு ரன் மட்டுமல்ல நான்கு ரன்கள் கிடைக்கிறது. இது பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க சிறந்த ஆப்சனாக உள்ளது.
இவ்வாறு மொயீன் அலி தெரிவித்தார்.
தற்போது இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ரிவர்ஸ் ஸ்விங் என்பது இல்லாமல் போய் விட்டது என முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.