search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விளையாடுவதற்கு ஒருநாள் கிரிக்கெட் மோசமானது: மொயீன் அலி
    X

    விளையாடுவதற்கு ஒருநாள் கிரிக்கெட் மோசமானது: மொயீன் அலி

    • முதல் 10 ஓவருக்குப் பிறகு பவர்பிளே கோட்டிற்கு வெளியே 4 பீல்டர்கள் நிற்க வேண்டும் என்பது கொடூரமான விதி.
    • பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கும்போது, ரிவர்ஸ்-ஸ்வீப்ஸ் மூலம் பவுண்டரி அடித்து விடுகிறார்கள்.

    டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று கிரிக்கெட் வடிவில் விளையாடுவதற்குன ஒருநாள் கிரிக்கெட் வடிவம் மோசமானது என மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மொயீன் அலி கூறியதாவது:-

    உலகக் கோப்பைகள், சாம்பியன்ஸ் டிராபி ஆகிவற்றை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட் வடிவம் ஏறக்குறைய செத்துவிட்டது. இது விளையாடுவதற்கான மோசமான வடிவம். இதற்கு ஏராளமான காரணம் இருப்பதாக நினைக்கிறேன்.

    ஒருநாள் போட்டி வடிவத்திற்கான விதி பயங்கரமானதாக உள்ளது. முதல் பவர்பிளேய்க்குப் பிறகு 4 வீரர்கள்தான் பவர்பிளே கோட்டிற்கு வெளியே நிற்க வேண்டும். விக்கெட் எடுப்பதற்கும், எந்தவிதமான நெருக்கடிகை ஏற்படுத்துவதற்கும் இது மிகவும் பயங்கரமான விதி. இதனால் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் 60, 70 சராசரி வைத்துள்ளனர்.

    தற்போது 11 முதல் 40 ஓவரை வரை நான்கு பீல்டர்கள் மட்டுமே பவர்பிளே கோட்டிற்கு வெளியே இருப்பதால், நீங்கள் ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்து வீசும்போது அவருக்கு சற்று நெருக்கடி கொடுக்கும்போது, அவர் ஜஸ்ட் ரிவர்ஸ்-ஸ்வீப்ஸ் செய்கிறார். இதனால் ஒரு ரன் மட்டுமல்ல நான்கு ரன்கள் கிடைக்கிறது. இது பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க சிறந்த ஆப்சனாக உள்ளது.

    இவ்வாறு மொயீன் அலி தெரிவித்தார்.

    தற்போது இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ரிவர்ஸ் ஸ்விங் என்பது இல்லாமல் போய் விட்டது என முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×