என் மலர்
நீங்கள் தேடியது "உள்ள மின்கம்பம்"
- மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது
- மின் கம்பம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்து செல்கிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு பி.பி.அக்ரஹாரம், ஜோசப் தோட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஜோசப் தோட்டம் பகுதியில் உயர் மின்னழுத்த லைன் செல்கிறது.
இங்குள்ள ஒரு உயர் மின் அழுத்த லைனில் உள்ள மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது.மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் கலவைகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் கம்பி வெளியே தெரிகிறது.
அந்தப் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த மின் கம்பம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்து செல்கிறார்கள். மின் கம்பம் உடைந்து எந்த நேரமும் விழும் சூழ்நிலையில் உள்ளது.
மேலும் மழை நேரங்களில் இந்த மின் கம்பம் மூலம் மின்சாரம் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.