என் மலர்
நீங்கள் தேடியது "3 பேர் மீது வழக்குப்பதிவு"
- 15 வயது சிறுமிக்கு திருமணம் நடை பெற்றது உறுதியானது.
- 3 பேர் மீது பர்கூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தாமரைக்கரை அடுத்த தாளக்கரை பகுதி யில் 15 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக ஈரோடு மாவட்ட சமூக நல குழந்தை திருமணத் தடுப்பு அலுவலர் சண்முகவடிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் ஞானசேகரன், சுபாஷினி, தேவகி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், நில வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் பர்கூர் போலீசார் பாதுகாப்புடன் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திருமணம் நடை பெற்றது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள் சிறுமியைத் திருமணம் செய்த ஜோகி (22) உள்பட 3 பேர் மீது பர்கூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின் படி போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.