என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் டிரைவர்கள்"
- பணியின்போதும் குளிர்பானங்கள், பழங்கள், இருமல் மருந்து, இளநீர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதா என்று கேட்டனர்.
- வெயில் நேரத்தில் என்ஜின் பெட்டி சூடாக இருக்கும் நிலையில், குளிர்பானங்கள் குடிக்க தடை விதிப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்று அவர்கள் கூறினர்.
புதுடெல்லி:
மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது, ம.தி.மு.க. எம்.பி. வைகோ, தி.மு.க. எம்.பி. சண்முகம் ஆகியோர், ரெயில் என்ஜின் டிரைவர்கள் பணிக்கு வரும்போதும், பணியின்போதும் குளிர்பானங்கள், பழங்கள், இருமல் மருந்து, இளநீர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதா என்று கேட்டனர்.
வெயில் நேரத்தில் என்ஜின் பெட்டி சூடாக இருக்கும் நிலையில், குளிர்பானங்கள் குடிக்க தடை விதிப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்று அவர்கள் கூறினர்.
அதற்கு பதில் அளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ''ரெயில் டிரைவர்கள், ஆல்கஹால் அல்லாத பானங்களை அருந்த எந்த கட்டுப்பாடும் இல்லை. சில பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஏற்கனவே திருத்தப்பட்டு விட்டன'' என்றார்.
- ‘ஸ்மார்ட் வாட்ச்'கள் ‘போர்ட்டபிள் மீடியா பிளேயர்’களாக செயல்படுகின்றன.
- எப்.எம். ரேடியோ மற்றும் புளூடூத் ஹெட்செட் வழியாக டிஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்குகின்றன.
புதுக்கோட்டை:
ஒடிசா ரெயில் விபத்தில் 288 பயணிகள் பலியானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் மதுரை கோட்டத்தில் பணியின்போது ரெயில் என்ஜின் டிரைவர்கள் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதித்து அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே வட்டாரத்தினர் கூறியதாவது:-
தற்போது 'ஸ்மார்ட் வாட்ச்' பயன்பாடு அதிகரித்துள்ளதால் 'புளூ டூத்' மூலம் வாட்சில் கனெக்ஷன் ஏற்படுவதால் அதில் அழைப்புகள் வந்தால் தெரிந்துவிடும். மேலும் சில 'ஸ்மார்ட் வாட்ச்'கள் 'போர்ட்டபிள் மீடியா பிளேயர்'களாக செயல்படுகின்றன.
எப்.எம். ரேடியோ மற்றும் புளூடூத் ஹெட்செட் வழியாக டிஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்குகின்றன. இதனால் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிந்து பணியாற்றுகிறபோது இதுபோன்ற காரணங்களால் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ரெயில் வேகமாக செல்லும்போது கவன சிதறல் ஏற்பட்டால் விபரீதமாகிவிடும். அதனால் இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.
இந்த உத்தரவு சென்னை கோட்டத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து நடைமுறைப்படுத்துவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.