search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டத்துக்கு வெடி"

    • விநி யோகம் செய்ய கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது.
    • காவிரி ஆற்றில் உள்ள பாறைகளை வெடி வைத்து தொழிலாளர்கள் தகர்த்து வருகின்றனர்.

    அம்மாப்பேட்டை, 

    ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த அம்மா பேட்டை காவிரியாற்றின் மறுகரையில் உள்ள சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காட்டூர் பகுதி காவிரி ஆற்றில் ராசிபுரம் மல்லசமுத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராசிபுரம், மல்லசமுத்திரம், நாமக்கல் ஆகிய பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடை பெற்று வருகிறது. காட்டூரில் நீரேற்று நிலையம் கட்ட ப்பட்டு கரட்டுப்புதூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து குடிநீர் விநி யோகம் செய்ய கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது.

    இந்நிலையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க இரவு, பகலாக 20-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் எந்திரத்தின் உதவியுடன் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். அம்மா பேட்டை காவிரியாற்றின் மறுகரையில் கட்டப்படும் நீரேற்று நிலைய பணிகளுக்கு காவிரி ஆற்றில் உள்ள பாறைகளை வெடி வைத்து தொழிலாளர்கள் தகர்த்து வருகின்றனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் முதல் கட்டுமான பணிகள் நடைபெற்று வரு கிறது. அதற்காக பாறைகளை தகர்க்க அதிக திறன் கொண்ட 'தோட்டாக்களை' பயன்படுத்தி வருகின்றனர்.

    தினமும் காலை முதல் மாலைக்குள் 2 முறை பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதால் பிளவு பட்டு சிதறும் பாறைத் துகள்கள் ஆற்றில் விழு கிறது. பாறை துகள்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் வெடி சத்தம் பெரும் பாதிப்பை உருவாக்குவதாக அம்மாபேட்டை கரையோர பொதுமக்கள் கூறுகின்ற னர்.

    இதுபற்றி கரையோர த்தில் வசிக்கும் பொது மக்கள் கூறும்போது:-

    ராசிபுரம்மல்ல சமுத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு அம்மா பேட்டை காவிரி ஆற்றின் மறுகரையில் பணிகள் நடந்து வருகிறது. சுமார் 500 மீட்டர் தொலைவில் நடக்கும் கட்டுமான பணி க்காக ஆற்றில் உள்ள பாறைகளை 'தோட்டாக்களை' பயன்படுத்தி வெடி வைத்து தகர்த்து வரு கின்றனர்.

    குறிப்பிட்ட தொலைவில் வெடி வைக்கும் போது கரையோர வீடுகள் அதிர்வு அடைகின்றன. ஒரு சில நேரங்களில் வீடுகளில் உள்ள பாத்திரங்கள் உள்ளி ட்ட பொருட்கள் கீழே விழு கின்றன.

    நிலநடுக்கத்தால் ஏற்படும் உணர்வு போல, கரையோர மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் இந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் வலுவிழந்து நாளடைவில் சரிந்து விழும் நிலையும் உருவாகலாம்.

    எந்த நேரத்தில் வெடி வைக்கிறார்கள் என தெரியாததால் திடீரென கேட்கும் வெடி சத்தத்தால், பயம் ஏற்படுகிறது.

    மேலும் அம்மாபேட்டை காவிரி கரையோரத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மற்ற பெண்கள் வெடி சத்தத்தால் ஒரு வித அச்சத்தில் இருந்து வரு கிறார்கள்.

    அதே நேரத்தில் மீன்பிடி க்கும் தொழிலாளர்கள் அச்சத்துடனேயே ஆற்றில் மீன் பிடித்து வருகின்றனர். இதுபற்றி எந்த அதிகாரிக்கு தகவல் தெரிவிப்பது என தெரியாமல் பொதுமக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×