என் மலர்
நீங்கள் தேடியது "வேம்பு"
- கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
- சாலைகளில் மகிழம், புளியன், வேம்பு, புங்கன், நாவல் உள்ளிட்ட 400 மரக்கன்றுகள் நடப்பட்டது.
திருநாகேஸ்வரம்:
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலையில் தஞ்சாவூர் நெடுஞ்சாலை த்துறை கோட்டம், கும்பகோணம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கும்பகோணம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மகிழம், புளியன், வேம்பு, புங்கன், நாவல் உள்ளிட்ட 400 மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் செந்தில்தம்பி, பிலீப் பிரபாகர், உதவி பொறியாளர்கள் இளவரசன், கந்தன் மற்றும் கும்பகோணம் மத்திய ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் ஜேசுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.