search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி சாவில்"

    • கார்த்திக் ராஜா (வயது 29). இவர் சங்ககிரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
    • ந்தரேஸ்வரிக்கும், கார்த்திக் ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் கிராமம் செம்மண் காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 29). இவர் சங்ககிரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கரேஸ்வரி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. சமீபத்தில் அந்த குழந்தை வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சுந்த ரேஸ்வரிக்கும், கார்த்திக் ராஜாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சுந்தரேஸ்வரி திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு எடப்பாடி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சுந்தரேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து சுந்தரேஸ்வரியின் பெற்றோர், பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் தங்களது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும் என புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுந்தரேஸ்வ ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுந்தரேஸ்வரி இறந்த வழக்கில் உரிய விசாரணை நடைபெற வில்லை என்றும், அவரது உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவு கோரி உறவினர்கள் நேற்று மாலை எடப்பாடி- சேலம் பிரதான சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், சுந்தரேஸ்வரியின் உடல் சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மறு பிரேத பரிசோதனை செய்யப்படும் எனவும் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் தொடர்ச்சியாக சுந்தரேஸ்வரி உடலை மீண்டும் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தொடர்ந்து சுந்தரேஸ்வரி சாவில் மர்மம் நீடித்து வருகிறது. அவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், அவரது இறப்பு குறித்து சங்ககிரி உதவி கலெக்டர் லோகநாயகியும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×