search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் தஞ்சம்"

    • அருமனை காவல் நிலையத்தில் மகளைக் காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்
    • சமரச பேச்சுவார்த்தை செய்து காதலன் சந்தோஷ் குமாருடன் அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி :

    அருமனை வலியவிளை, இரும்புலி பகுதியை சார்ந்த குமார் மகள் ஜினிதா குமாரி 20 கடந்த 6-ம் தேதியிலிருந்து காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவருடைய தந்தை குமார் அருமனை காவல் நிலையத்தில் மகளைக் காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் அருமனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் காணாமல்போன பெண் கோயம்புத்தூர் பகுதியில் சந்தோஷ் குமார்(22) என்ற வாலிபருடன் தங்கியிருப்பது தெரியவந்தது. போலீசாரின் அழைப்பை ஏற்று அருமனை காவல் நிலையத்திற்கு வந்தனர். ஜினிதா குமாரி தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றபோது நாங்குநேரி மூக்காண்டி, பாம்பன் விளையை பகுதியை சார்ந்த சந்தோஷ் குமாரை சந்தித்ததாகவும் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதால் சுய விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பின் கோயம்புத்தூர் பகுதியில் தங்கி இருந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து அருமனை போலீசார் ஜினிதாகுமாரியின் தந்தை குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சமரச பேச்சுவார்த்தை செய்து காதலன் சந்தோஷ் குமாருடன் அனுப்பி வைத்தனர்.

    ×