search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் விழிப்புணர்வு"

    • இந்திரபாபு என்பவரின் சட்டையில் மையை தடவி நூதன முறையில் கொள்ளையர்கள் பணத்தை பறித்து சென்றனர்.
    • கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் பாலவாக்கத்தில் உள்ள வங்கியில் ரூ. 1.32 லட்சம் பணத்தை எடுத்து வந்தபோது மர்ம நபர்கள் 100 ரூபாய் நோட்டுகளை வீசி பணத்தை பறித்து சென்றனர்.

    இதேபோல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாஸ் குப்பத்தில் உள்ள வங்கியில் ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்து வந்த இந்திரபாபு என்பவரின் சட்டையில் மையை தடவி நூதன முறையில் கொள்ளையர்கள் பணத்தை பறித்து சென்றனர். இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் உத்தரவின் படி சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ஊத்துக்கோட்டையில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • மாடலாக முடிவெட்டி இருந்தால் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறுவோம் என விழிப்புணர்வு செய்தனர்.

    சென்னை:

    சென்னையில் பள்ளி செல்லும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யாதிருத்தல் மற்றும் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்து போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர்.

    புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் சாலையில் வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் போலீசார் சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு வர வேண்டும். படிக் கட்டில் பயணம் செய்யக் கூடாது. ஸ்டைலாக முடி வைக்க கூடாது. பெற்றோருக்கும், பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் நோக்கில் நன்கு படிக்க வேண்டும்.

    உலகில் ஒருவருக்கு பெரிய சொத்து என்பது கல்விதான். எனவே கல்வியை நன்றாக கற்க வேண்டும்.

    மாடலாக முடிவெட்டி இருந்தால் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறுவோம் என விழிப்புணர்வு செய்தனர். போலீசாரின் இந்த முயற்சிக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் பாராட்டினர்.

    ×