search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிய உணவு திட்டம்"

    • தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ளனர்.
    • சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 1962-ம் ஆண்டு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டமானது 1982-ம் ஆண்டு சத்துணவு திட்டம் மேம்படுத்தப்பட்டது.

    அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளும் முறையாக பள்ளி செல்வதை ஊக்குவிக்கும் வகையிலும், அனைவருக்கும் ஆரம்பக்கல்வி வழங்குவதை உறுதி செய்யவும், இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்து மிகுந்த சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான 20 லட்சத்து 74 ஆயிரத்து 39 மாணவர்களும், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த 21 லட்சத்து 97 ஆயிரத்து 914 மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது, சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் மாணவர்களுக்கு, 43 ஆயிரத்து 131 சத்துணவு மையங்கள் மூலம் 5 வகையான கலவை சாதங்களுடன் மசாலா முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது, மாணவர்களுக்கு பிடித்த உணவாகவும் மாறி உள்ளது.

    இருப்பினும், சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு, சத்துணவு தயாரிப்பின்போது, முட்டையை உரிக்க பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக, அதிகளவு பயனாளிகளை கொண்ட சத்துணவு மையங்களை சேர்ந்த பணியாளர்கள் முட்டை உரித்தலில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, அதிகளவு பயனாளிகளை கொண்ட சத்துணவு மையங்களுக்கு முட்டை உரிப்பதற்கான நவீன எந்திரம் கொள்முதல் செய்ய சமூக நலன் துறை திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ளனர். இந்த மையங்களை சேர்ந்த பணியாளர்கள் தினமும் 500 முட்டைகளுக்கு மேல் வேக வைத்து அவற்றை உரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்கள் சிரமங்களை சந்திக்கிறார்கள். சில நேரங்களில், மாணவர்களுக்கான முட்டைகள் உடைந்து வீணாகி விடுகின்றன.

    மேலும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதன்காரணமாக, அதிக அளவு பயனாளிகளை கொண்ட 431 பள்ளி சத்துணவு மையங்களுக்கு நவீன முட்டை உரிக்கும் எந்திரம் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து எந்திரம் கொள்முதல் செய்வதற்கான அனுமதி கோரி தமிழக அரசிடம் சமூக நலத்துறை சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில், இதற்கான அனுமதி கிடைத்துவிடும். அதன்பிறகு, டெண்டர் விடப்பட்டு, முட்டை உரிக்கும் எந்திரம் சத்துணவு மையங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்த எந்திரம் பயன்பாட்டு வந்தால், சத்துணவு பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
    • மதிய உணவு சாப்பிட்டு 15 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தை அடுத்த சிராபூரில் உதய் நாராயணன் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    நேற்று மதியம் அரங்கேறிய இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக அரிசி சாதம் மற்றும் கறி வழங்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் சாப்பிட துவங்கிய நிலையில், ஒரு மாணவர் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததை கண்டறிந்தார். உடனே அந்த உணவை சாப்பிட வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் அனைவரும் சிராபூரில் உள்ள சோரோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் குறித்து கல்வி அலுவலர் கூறும் போது, இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெறும் என்றும் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    முன்னதாக உத்தர பிரதேச மாநிலத்தின் கராக்பூரில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு சாப்பிட்டு 15 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட 80 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4,114 கோடி கூடுதல் நிதி.
    • ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு திட்டத்தின் செலவின தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4,114 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ. 1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் ரூ. 0.46 எனவும், எரிபொருளுக்கான செலவினம் ரூ.0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் பள்ளி மூடப்பட்டது.
    • மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வீரசோழபுரம் ஊராட்சியில் உள்ள மோளாங்குட்டைபாளையத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் பள்ளி மூடப்பட்டது.

    அதிகாரிகள் தற்போது மேற்கொண்ட முயற்சியால் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால் மதிய உணவு வழங்க அனுமதி இல்லாத நிலையில் இருந்து வந்தது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று முதல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக சத்துணவு மேலாளர் ஜெயந்தி, வட்டார கல்வி அலுவலர் சிவகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் பவுலின் சியா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×