search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேஜர் லீக் கிரிக்கெட்"

    • முதலில் ஆடிய வாஷிங்டன் பிரீடம் அணி 15.3 ஓவரில் 174 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது.
    • டக்வொர்த் லீவிஸ் விதிப்படி யூனிகார்ன் அணி வெற்றிபெற 14 ஓவரில் 177 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நடந்து வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் 20-வது போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன், வாஷிங்டன் பிரீடம் அணிகள் மோதின. டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ யூனிகான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

    அதன்படி முதலில் ஆடிய வாஷிங்டன் பிரீடம் அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 174 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

    இதனால் ஆட்டம் தடைபட்டது. ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் தலா 56 ரன்கள் எடுத்து வெளியேறினர். ரச்சின் ரவீந்திரா 6ப ந்தில் 2 சிக்சருடன் 16 ரன் எடுத்தார்.

    மழை பெய்து ஆட்டம் தடைபட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி யூனிகார்ன் அணி வெற்றிபெற 14 ஓவரில் 177 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    சான் பிரான்சிஸ்கோ பிரீடம் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் முதல் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய இந்திய வம்சாவளி வீரான சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜோஷ் இங்கிலீஷ் 17 பந்தில் 45 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணி 13.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 42 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து, ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி வீரரான சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி பிரசாத், கர்நாடகா அண்டர் 16 அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் பேட்டிங் செய்த சியாட்டல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் சேர்த்தனர்.
    • எம்.ஐ அணியின் கேப்டன் பூரன் 137 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் எம்.ஐ நியூயார்க் அணியும் சியாட்டல் ஆர்கஸ் அணியும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த சியாட்டல் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் சேர்த்தனர். அதன் பின்னர், களமிறங்கிய எம்.ஐ. நியூயார்க் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    எம்.ஐ அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 55 பந்தில் 10 பவுண்டரி 13 சிக்ஸர்கள் என மொத்தம் 137 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் எம்.ஐ அணி மேஜர் லீக் தொடரின் முதல் கோப்பையை வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

    இந்த தொடர் மூலமாக மொத்தமாக மும்பை அணி 9 முறை சாம்பினாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன், சாம்பியன் லீக் டி20யில் 2 முறை சாம்பியன், மகளிர் பிரீமியர் லீக்கில் ஒரு முறையும், மேஜர் லீக் கிரிக்கெட்டில் ஒரு முறையும் மும்பை அணி சாம்பினாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெக்சாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களே சேர்த்தது.
    • சியாட்டில் ஓர்காஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    டல்லாஸ்:

    மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஓர்காஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெக்சாஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    அதன்படி களமிறங்கிய டெக்சாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களே சேர்த்தது. சியாட்டில் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட், இமாத் வாசிம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சியாட்டில் ஓர்காஸ் அணி களம் இறங்கியது.

    சியாட்டில் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டி காக்கின் அதிரடியால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் சியாட்டில் ஓர்காஸ் அணி 15 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 127 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    சியாட்டில் அணி தரப்பில் டி காக் 50 பந்தில் 88 ரன் குவித்தார். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 2-ம் இடம் பிடித்த டெக்சாஸ் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. டெக்சாஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் எம்.ஐ நியூயார்க் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    • சாம்ஸ் 18 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
    • 19.1 ஓவரில் 172 ரன்கள் எடுத்து டிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

    அமெரிக்காவில் முதல் முறையாக மேஜர் லீக் கிரிக்கெட் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணிகள் ஐபிஎல் அணிகளின் கிளை அணிகளாக உள்ளன.

    இந்நிலையில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சான் பிரான்சிஸ்கோ 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 14 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து அதிரடியாக பேட் செய்த டேனியல் சாம்ஸ், அணியை வெற்றிக்கு பாதைக்கு அளித்து சென்றார்.

    சாம்ஸ் 18 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். இதனால் 19.1 ஓவரில் 172 ரன்கள் எடுத்து டிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது அணியாக டிஎஸ்கே ப்ளேஆப் சுற்றுக்கு நுழைந்துள்ளது.

    இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் - சீட்டில் ஆர்காஸ் அணிகள் மோதுகின்றன. 

    • சிஎஸ்கே குழுமத்துடன் இணைந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது.
    • டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடுவும் இணைந்துள்ளார்.

    இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்று மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கு உலக அளவில் கிடைத்த வரவேற்பின் காரணமாக தற்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நிர்வாகங்களும் அவர்களது நாட்டில் டி20 லீக் போட்டிகளை அறிமுகப்படுத்தி நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற இருக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 என்கிற லீக் போட்டிகளானது முதல் சீசனாக இந்தாண்டு நடைபெற இருக்கின்றன. இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கிறது.

    அதில் சிஎஸ்கே குழுமத்துடன் இணைந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் நகரை தலைமையாக கொண்ட இந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்கே முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு சிஎஸ்கே அணியில் இருந்த உதவி பயிற்சி நிர்வாகிகள் அனைவரும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.


    மேலும் இந்த டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடுவும் இணைந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி பிசிசிஐ தொடர்புடைய அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வினை அறிவித்த ராயுடு தற்போது அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். அவருக்கு இந்த வாய்ப்பினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகமே வழங்கி உள்ளது. அதேபோன்று சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் பிராவோவும் இந்த தொடரில் ஒரு வீரராக விளையாடுகிறார்.

    இப்படி அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்த லீக் போட்டியில் விளையாடும் அந்த வாய்ப்பு குறித்து அம்பத்தி ராயுடுவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரானது ஜூலை 14-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆறு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ஏழு வீரர்களை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் சென்னை அணிக்காக விளையாடி வரும் டேவான் கான்வே மற்றும் மிட்சல் சான்ட்னர் ஆகியோரும் இந்த தொடரில் விளையாடுகின்றனர்.

    அதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர்கள் டேவிட் மில்லர், ஜெரால்டு கோட்சே ஆகியோரும் தற்போது இடம் பிடித்துள்ளனர். அதனைத்தவிர்த்து மீதமுள்ள வீரர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த உள்ளூர் வீரர்களாக இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×