search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிக ஒலி"

    • இவர் திண்டிவனத்தில் உள்ள வேல்டிங் கடையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார்.
    • அதிவேகமாக வந்த தனியார் பஸ் ராமதாஸ் மீது மோதியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல் சிவிரி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்( வயது 33). இவர் திண்டிவனத்தில் உள்ள வேல்டிங் கடையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாரில் உள்ள ராமதாசின் மாமியார் வீட்டில் தங்கி உள்ளனர். அவர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக திண்டிவனத்தில் இருந்து பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் தெள்ளார் நோக்கி ராமதாஸ் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த ஊரல் அருகே வரும்போது அதிவேகமாக வந்த தனியார் பஸ் ராமதாஸ் மீது மோதியது.இந்த விபத்தில் ராமதாஸ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த ரோசனை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமதாஸின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ்சை பறிமுதல் செய்து வேலூர் பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் தினேஷ்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆயுத பூஜை கொண்டாடச் சென்ற வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில் இந்த பகுதி மிகவும் குறுகிய சாலை பகுதியாகவும் இந்த பகுதியில் திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி,வேலூர், செல்லும் தனியார் பஸ்கள் அதிக ஒலி எழுப்பி அதி வேகமாக செல்வதே தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதாக தெரிவித்தனர்.எனவே டிரைவர்களுக்கு போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறையினர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
    • தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக இருச்சக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன.

    கொல்லங்கோடு, ஜூன்.17-

    தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக இருச்சக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன.

    இதில் நவீன ரக வாகனங்களும், விலை உயர்ந்த இருச்சக்கர வாகனங்களும் இங்கு அதிகம் விற்பனை ஆகின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களே இத்தகைய வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த வாகனங்களில் அரசு அனும தித்து உள்ள அள வை விட அதிக ஒலி எழுப்பும் கருவி களை பொருத்தி வீதிகளிலும், சாலைகளி லும் வலம் வரு கிறார்கள்.

    குறிப்பாக கிராம புறங்களில் உள்ள சாலைகளில் இப்படி அதிக ஒலி எழுப்பியபடி செல்லும் இருச்சக்கர வாகனங்களால் பொதுமக்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடிக்கிறார்கள். மேலும் முதியோர் மற்றும் பெண்கள், குழந்தைகள் இச்சத்தத்தை கேட்டு மிரண்டு ஓடும் சம்பவங்களும் நடக்கிறது. இப்படி அதிக ஒலியுடன் வலம் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

    இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர், குமரி மாவட்டத்தில் அதிக ஒலி எழுப்பி செல்லும் வாகனங்களை அனைத்தையும் பறிமுதல் செய்து கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்ற போலீசார் அதில் பொருத்தப்பட்ட கருவிகளை அகற்றியதோடு, அதனை ஓட்டி வந்தோருக்கு அபராதமும் விதித்தனர்.

    குளச்சல் பகுதியில் நேற்று சுமார் 12-க்கும் மேற்பட்ட வாகனங்கள் போலீ சாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது போல நாகர்கோ வில், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் வாகனங்களை கண்காணிக்கும் பணி நடந்து வரு கிறது.

    ஆனால் கொல் லங்கோடு பகுதி யில் இன்னும் அதிக ஒலி எழுப் பியபடி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வில்லை. இதனால் இங்கு சாலையில் நடந்து செல்லும் முதியோரும், பெண்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். சில இடங்களில் ஆடு, மாடு போன்ற விலங்குகள் மிரண்டு ஓடி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்தது.

    எனவே இந்த பகுதியில் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களால் பேராபத்து ஏற்படும் முன்பு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×