என் மலர்
நீங்கள் தேடியது "புதிய இன்ஸ்பெக்டர்"
- அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக செந்தில்குமார் பொறுப்பேற்று கொண்டார்.
- அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பணி நிறைவு பெற்று சென்றார்.
அதனைத்தொடர்ந்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அம்மாபேட்டை, பவானி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் காரமடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இன்று அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.
அவருக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, தனபால் உள்ளிட்ட போலீசார் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
- ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புதிய போலிஸ் இன்ஸ்பெக்டராக பாலசுந்தரம் பொறுப்பு ஏற்று கொண்டார்.
- ராமநாதபுரம் தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தா பாலசுந்தரம் ஒகேனக்கல்லுக்கு மாறுதலாகி வந்துள்ளார்.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த மகேந்திரன் திருச்செங்கோடு டவுன் காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டடார்.
இந்நிலையில் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டராக பாலச்சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராமநாதபுரம் தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடதக்கது.
பணியிட மாறுதலாகி நேற்று ஒகேனக்கல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பாலசுந்தரம் பொறுப்பேற்றுக்கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார். அருகில் இருந்த காவலர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறினர்.