search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரத் வித்யா மந்திர் பள்ளி"

    • மாணவர்கள் சுயமாக சிந்திக்கவும், எழுதவும் படிக்க வேண்டும் என்று பேராசிரியர் சுதாகரன் பேசினார்.
    • அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் விருது விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி கல்வி குழும தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி முதல்வர் வனிதா மற்றும் கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் சுதாகரன் பங்கேற்று பேசுகையில், இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், மாணவர்கள் சுயமாக சிந்திக்கவும், எழுதவும் படிக்க வேண்டும் என்றார். முன்னதாக அவருக்கு பள்ளி கல்வி குழும செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். மாணவி கவுசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.மாணவன் ஜெர்வீன் சாம் ராஜ் வரவேற்று பேசினார்.

    இதில் இயற்கையை பாதுகாக்கும் விதமாக பேராசிரியர் சுதாகரன் இயற்கை கழகத்தினை தொடங்கி வைத்து அனைவரும் இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து பரணிதரன் குழுவினர் இயற்கையை பாதுகாப்பு பற்றி நாடகம் நடத்தினர்.துவிதி குழுவினர் குறு நாடகம் நடத்தினர். மீனாட்சி குழுவினர் நடனம் ஆடினர். அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவன் நிகிஸ்ராம் நன்றி கூறினார். கலந்து கொண்ட மாணவர்களையும், பரிசு பெற்றவர்களையும் பள்ளி கல்வி குழும தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் மற்றும் முதல்வர் வனிதா பாராட்டினர்.

    ×