என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவநாள்"

    • தேரானது முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
    • பக்தர்கள் ஆடு, மாடுகளை காணிக்கையாக வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த கோகூரில் ஆங்கிலேயர்க ளால் கட்டப்பட்ட நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்தோணி யார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைப்பெறும். இந்த ஆண்டுக்கான ஆண்டுத் திருவிழா கடந்த ஜூன்6-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி நடைபெற்றது. இதனையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அந்தோணியார், மாதா, சம்மனுசு ஆகியோர் எழுந்தருளினர்.

    முன்னதாக, ஆலய பங்குத்தந்தை தேவ சகாயம் தலைமையில் நவநாள், ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. பின்னர் சப்பரத்தை புனிதம் செய்து துவக்கி வைத்தார். ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய சப்பரம் வாத்திய இசை முழக்கத்தோடு முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் பல்லாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சாம்பிராணி சட்டியை கையில் ஏந்திய படியும், ஆடு மாடு உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கியும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். இந்த தேர் பவனியில் சுற்று வட்டாரமின்றி வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரம் கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று புனித அந்தோணியாரை வழிப்பட்டனர்.

    ×