என் மலர்
நீங்கள் தேடியது "களப்பாகுளம் ஊராட்சி"
- களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவராக சிவசங்கரியும், துணைத் தலைவராக மரகதம் என்பவரும் உள்ளனர்.
- விசாரணையில் களப்பாகுளம் பஞ்சாயத்தில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் யூனியன் களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவராக சிவசங்கரியும், துணைத் தலைவராக மரகதம் என்பவரும் உள்ளனர். இந்த பஞ்சாயத்தில் அடிப்படை மற்றும் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள ப்பட வில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தென்காசி மாவட்ட கலெக் டரிடம் தொடர்ந்து வந்தது.
குற்றச்சாட்டு
இதனையடுத்து சங்கரன்கோவில் வட்டார மண்டல அலுவலர் ராஜா மணி மற்றும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் பிரான்சிஸ் மகாராஜன் ஆகியோரை விசாரணை அதிகாரிகளாக நியமித்து விசாரணை நடத்த கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
அவர்கள் நடத்திய விசாரணையில் களப்பாகுளம் பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
அதிகாரம் பறிப்பு
இது குறித்த அவர்கள் அளித்த அறிக்கையின் பேரில் கலெக்டர் ரவிச்சந்திரன் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி மற்றும் துணைத் தலைவர் மரகதம் ஆகியோர்களுக்கு காசோலை கள் மற்றும் பி.எப்.எம்.எஸ். என்ற பணம் வழங்கும் ரசீதுகளில் கையெழுத்து இடும் அதிகாரத்தை பறித்து அதனை சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கினார். பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் நடைபெறாததால் பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது கலெ க்டர் அதிரடி நடவ டிக்கை எடுத்து மேற்கொண்ட சம்பவம் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறும்போது, சங்கரன்கோவில் நகராட்சி எல்லையின் அருகில் களப்பாகுளம் பஞ்சாயத்தின் பெரும்பாலான பகுதிகள் அமைந்துள்ளது. தனி கிராம பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளை நகராட்சியுடன் இணைத்தால் அடிப்படை வசதிகள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும் என்பதால் எம்.எல்.ஏ. இந்த விஷயத்தில் அக்கறை எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.