search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துவர்கள்"

    • ஸ்தோத்திர பண்டிகை கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கூட்டத்தில் சேகரகுரு ஜோயல் சாம் மெர்வின், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை மேட்டூர் பரி திரித்துவ ஆலயத்தில் கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.நேற்று மாலை வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேகர தலைவர் கிங்ஸ்லி ஜான்ஸ்டீபன் தலைமை தாங்கினார்.

    சாராள் தக்கர் கல்லூரி செயலர் சவுந்தரபாண்டியன் செய்தி அளித்தார். கூட்டத்தில் சேகரகுரு ஜோயல் சாம் மெர்வின், தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜ் காளித்துரை, அற்புதராஜ், ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், ஏ.ஜி.கணேசன், துரைராஜ் பாண்டியன், மோசே ராம்ராஜ், அரியப்புரம் ஊராட்சித்தலைவர் தினேஷ்குமார், துணைத்தலைவர் சக்திகுமார், சேகர செயலர் செல்வராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் டேவிட் செல்வராஜ், சிம்சோன் தேவதாசன் மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் கலந்து கொண்டனர்.

    • முதல் நாள் விழாவில் குருவிகுளம் பங்குத்தந்தை சந்தியாகு புனித இஞ்ஞாசியார் கொடியினை ஏற்றி வைத்தார்.
    • திருப்பலி முடிந்ததும் மதியம் அன்னதானம் நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள சம்சிகாபுரத்தில் தூய லொயோலா இஞ்ஞாசியார் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாள் விழாவில் குருவிகுளம் பங்குத்தந்தை சந்தியாகு புனித இஞ்ஞாசியார் கொடியினை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார்.

    2-ம் நாள் துரைச்சாமிபுரம் பங்குத்தந்தை பவுல் ஸ்டாலின் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு சப்பர பவனி நடைபெற்றது. 3-ம் நாளான நேற்று காலை திருவிழா திருப்பலியை வீரமாமுனிவர் சித்த மருத்துவமனை இயக்குனர் அருள்ராஜ் தலைமையில் திருவிழா திருப்பலியாக நிறைவேற்றப்பட்டது.

    விழாவில் சங்கரன்கோவில் பங்குதந்தை ஸ்டீபன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்ததும் மதியம் அன்னதானம் நடைபெற்றது. புனித இஞ்ஞாசியார் உருவம் பதித்த கொடியினை சாப்ளின் டெய்லரிங் உரிமையாளர் பாஸ்கரன் செய்து கொடுத்திருந்தார். ஏற்பாடுகளை சங்கரன்கோவில் பங்குதந்தை ஸ்டீபன் மற்றும் சம்சிகாபுரம் இறைமக்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • உறுதி பூசுதல் விழாவுக்கு பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமை தாங்கினார்.
    • விழாவில் சிறுவர், சிறுமிகளுக்கு உறுதி பூசுதல் அருளடையாளம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் நெல்லை - தென்காசி சாலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் உறுதிபூசுதல் விழா கொண்டாடப்பட்டது. பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமை தாங்கி புது நன்மை எடுத்த 75 சிறுவர், சிறுமிகளுக்கு உறுதி பூசுதல் அருளடையாளம் வழங்கப்பட்டு திருப்பலி நிறை வேற்றப்பட்டது .ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை ஜேம்ஸ் அடிகளார் மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர். இதில் உறுதி பூசுதல் பெற்ற சிறுவர், சிறுமிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    ×