என் மலர்
நீங்கள் தேடியது "கோழிக்கடை"
- பசும்பொன் அருகே கோழிக்கடை சூறையாடப்பட்டது.
- கமுதி போலீசில் புகார் செய்தார்.
பசும்பொன்
பசும்பொன் அருகே உள்ள கே.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் திருக்கண் (வயது44). இவர் கண்ணார்பட்டியில் கோழிக்கடை நடத்தி வருகிறார்.
இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பதினெட்டாம் படியான் மகன் ரமேஷ் (29) கோழிக்கறியை கடனாக கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு திருக்கன் பழைய பாக்கி உள்ளதால் கடன் தர முடியாது என மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்கண் கமுதி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.