search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வாரியம் விளக்கம்"

    • மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலமே செய்ய வேண்டும்.
    • தீ விபத்து ஏற்பட்டால் மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மரியா ஆரோக்கியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை பயன்படுத்துங்கள்.

    ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்றவைகளுக்கு 3 பின் சாக்கெட் பிளக்குகளை பயன்படுத்துங்கள்.

    மின் கசிவு தடுப்பானை இல்லங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் பயன்படுத்துங்கள். உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை உடனே மாற்றுங்கள். பழுதான மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.

    5 ஆண்டுக்கு ஒரு முறை வயரிங்குகளை சோதனை செய்து மாற்றுங்கள். மின் கம்பங்கள், அவற்றின் ஸ்டே வயர்கள் மீது அல்லது மின் கம்பத்தின் மீதும் கொடி கயிறு கட்டி துணிகளை உலர்த்த கூடாது. குளியலறை, கழிப்பறை போன்ற ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது.

    மின் கம்பங்கள், ஸ்டே கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. மின் கம்பங்களை பந்தலாகவும், விளம்பர பலகை கட்டவும் பயன்படுத்தக்கூடாது.

    மழை, பெருங்காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்ல கூடாது. உடனே மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மின் கம்பிகள் அருகே செல்லும் மரக்கிளைகளை மின்வாரிய அலுவலர்கள் உதவியுடன் அகற்ற வேண்டும். அவசர நேரத்தில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும்படி மின் கருவிகளின் சுவிட்சுகளை அமைக்க வேண்டும்.

    மின்சார தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பான்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.

    இடி, மின்னலின் போது வெளியே இருக்காதீர்கள். கான்கிரீட், கூரை வீடுகளின் கீழ் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையலாம். குடிசை, மரங்களின் கீழ் தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்கக்கூடாது. மின்சாதனங்களை பயன்படுத்தக்கூடாது.

    மேலும் மின் புகார்களை மின்னகம் எண்: 94987 94987, வாட்ஸ் அப் எண்: 94458 51912 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×