search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்கேற்ற"

    • சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்தது.
    • கோட்டாறு டி.வி.டி பள்ளி வளாகத்தில் நடந்த யோகா பயிற்சியில் பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும், நாகர்கோவில் மாநகர பகுதியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோட்டாறு டி.வி.டி பள்ளி வளாகத்தில் நடந்த யோகா பயிற்சியில் பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்து கொண்டனர். மூச்சுப் பயிற்சி, பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நெசவாளர் காலனி சமுதாய நலக்கூடம், தம்பத்து கோணம் பகுதியிலும் யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள பள்ளிக் கூடங்களிலும் இன்று மாணவ-மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த யோகா பயிற்சியில் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் கலந்து கொண்டார். விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள், பொதுமக்கள் யோகா பயிற்சியில் பங்கேற்றனர்.

    நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி அருள் முருகன், கூடுதல் மாவட்ட நீதிபதி ஜோசப் ஜாய் மற்றும் நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் கோணம் கேந்திர வித்யாலயா பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வேல் தலைமையில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இதுபோல் தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்க மங்கலம், குளச்சல், தக்கலை, திருவட்டார், மேல்புறம், குழித்துறை, முன்சிறை, கிள்ளியூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் யோகா பயிற்சி இன்று நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும் மாணவ- மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    ×