என் மலர்
நீங்கள் தேடியது "யோகா தினவிழா"
- அன்னப்பராஜா பள்ளியில் யோகா தினவிழா நடந்தது.
- உடற்கல்வி ஆசிரியர்கள் லட்சுமணன், கிருஷ்ணகுமார் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி யில் சர்வதேச யோகா தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ராஜபாளையம் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் கலந்து கொண்டார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.
முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.என்.ஏ.மஞ்சம்மாள் தொழில்நுட்ப கல்லூரி இயக்குநர் விஸ்வநாதன், என்.ஏ. ராமச்சந்திரராஜா அறக்கட்டளை கருத்தாளர்கள் சிவகுமார், பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாணவன் சுதர்சன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் லட்சுமணன், கிருஷ்ணகுமார் செய்திருந்தனர்.