என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திறப்பு தள்ளி வைப்பு"
- விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி வெளியிடப்பட்டது.
- இம்மாதம் 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இருக்கும் 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களுக்கு நடப்பாண்டு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 பேர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி வெளியிடப்பட்டது. 2 கட்ட கலந்தாய்வு முடிவில், 31 ஆயிரத்து 621 மாணவர்கள், 44 ஆயிரத்து 190 மாணவிகள் என மொத்தம் 75 ஆயிரத்து 811 பேர் இடங்களை தேர்வு செய்து இருக்கின்றனர். மொத்தம் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரம்பியுள்ளது. இந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, மீதமுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தொடர்கிறது. இம்மாதம் 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வி த்துறை அறிவித்துள்ளது.
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் 22 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 77 சதவீத இடங்கள் நிரம்பியது. மீதமுள்ள 23 சதவீதம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.