என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கள்ளச்சாராயம்"
- கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
- இரண்டாவது முறையாக ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கில் ஜாமின் கோரி சடையன், வேலு, கெளதம் ஜெயின் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சடையன், கெளதம் மற்றும் ஜெயின் ஆகிய 3 பேரின் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சிபிசிஐடி விசாரணை நடந்துவருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் அதிக அளவில் காய்ச்சப்படுவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.
- இதையடுத்து ஆத்தூர் டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து மணிவிழுந்தான் பகுதியில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் அதிக அளவில் காய்ச்சப்படுவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு புகார்கள் வந்தன.
மேலும் அங்கு காயச்சப்படும் கள்லச்சாராயத்தை லாரி டியூப்புகள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து தலைவாசல் நத்தக்கரை, மணிவிழுந்தான், ராமசேசபுரம், சார்வாய்புதூர், மணிவிழுந்தான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாகவும் ரகசிய தகவல் வந்ததது.
இதையடுத்து ஆத்தூர் டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து மணிவிழுந்தான் பகுதியில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மூன்று இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அங்கிருந்த போலீசாரை கண்டதும் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை போலீசார் துரத்தி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மணிவிழுந்தான் அருகே ராமசேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 35) சேகர்( 36) மோகன் (37) என்பதும்
அவர்கள் சாக்கு மூட்டை யில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 300 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் 3 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைதான 3 பேரையும் போலீசார் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்