என் மலர்
நீங்கள் தேடியது "உலக கோப்பை தகுதிச்சுற்று"
- ஓமன் தரப்பில் அதிகபட்சமாக அயன் கான் 41 ரன்கள் எடுத்தார்.
- இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒருநாள் உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இலங்கை மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய ஓமன் அணி 20 ரன்கள் எடுப்பதற்க்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ஜதீந்தர் சிங் - அயன் கான் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியை ஹசரங்கா பிரித்தார். ஜதீந்தர் சிங் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதிகபட்சமாக அயன் கான் 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஓமன் அணி 30.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 5 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.
- யு.ஏ.இ. அணி 35.3 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது.
ஒருநாள் உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் சிறப்பாக ஆடிய ரிச்சி பாரிங்டன் சதம் அடித்தார். அவர் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
யு.ஏ.இ. சார்பில் ஜுனைட் சித்திக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 283 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய யு.ஏ.இ., ஸ்கட்லாந்து அணியின் அபார பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் யு.ஏ.இ. அணி 35.3 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்காட்லாந்து அணி சார்பில் ஷெரீப் 4 விக்கெட் , கிறிஸ் சோல் 3 விக்கெட் வீழ்த்தினர்.
- நேபால் அணி கேப்டன் ரோகித் அதிகபட்சமாக 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உலக கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று நேபால் - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் நேபால் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக குஷால் புர்டெல் - ஆசிப் ஷேக் ஆகியோர் களமிறங்கினர். ஆசிப் ஷேக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பீம் ஷர்கி - குஷால் புர்டெல் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
நேபால் அணி 66 ரன் எடுத்த போது 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. குஷால் புர்டெல் 27 ரன்னிலும் அடுத்து வந்த ஆரிப் ஷேக் 6 ரன்னிலும் பீம் ஷர்கி 22 ரன்னிலும் அவுட் ஆகினர். சிறிது நேரம் தாக்குபிடித்த கேப்டன் ரோகித் 33 ரன்னில் வெளியேறினார்.
அடுத்த வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்ததால் நேபால் அணி 44.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராசா 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உலக கோப்பை கிரிக்கெட்டின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக எர்வின் -ஜாய்லார்ட் கும்பி களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.
முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த ஜிம்பாப்வே அணி 112 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஜாய்லார்ட் கும்பி 26, எர்வின் 47, வெஸ்லி மாதேவேரே 2, சீன் வில்லியம்ஸ் 23 என ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ராசா - ரியான் பர்ல் ஜோடி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த ஜோடி 5 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரை சதம் அடித்தனர். 50 ரன் எடுத்த நிலையில் ரியான் பர்ல் அவுட் ஆனார். அடுத்து வந்த கிளைவ் மடாண்டே 5, ராசா 68 ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 49.5 ஓவரில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளையும் அல்ஜாரி ஜோசப், அகேல் ஹொசின் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 268 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 233 ரன்கள் எடுத்து தோற்றது.
ஹராரே:
உலக கோப்பை கிரிக்கெட்டின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் ஹராரேவில் இன்று மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 49.5 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிக்கந்தர் ராசா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 68 ரன்னில் வெளியேறினர். ரியான் பர்ல் 50 ரன்னிலும், எர்வின் 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், அகேல் ஹொசின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 56 ரன்னில் அவுட்டானார். ரோஸ்டன் சேஸ் 44 ரன்னும், நிகோலஸ் பூரன் 34 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது. சிக்கந்தர் ராசாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
- ஜிம்பாப்வே அணியின் கேப்டன் வில்லியம்ஸ் 174 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ரியான் பர்ல் 16 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வே - அமெரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாய்லார்ட் கும்பி- அப்பாவி காயா களமிறங்கினர். இன்னசெண்ட் காயா 32 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஜாய்லார்ட் கும்பியுடன் கேப்டன் வில்லியம்ஸ் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்தினர்.
ஜாய்லார்ட் கும்பி 78 ரன்கள் இருந்த போது ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி வில்லியம்ஸ் 65 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 2 சிக்சர், 5 பவுண்டரிகளை விளாசிய ராசா 48 ரன்னில் அவுட் ஆனார். 200 ரன்கள் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட வில்லியம்ஸ் 174 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரியான் பர்ல் ருத்ரதாண்டவம் ஆடினார். இவர் 16 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 408 ரன்கள் குவித்தது. அமெரிக்க அணி தரப்பில் அபிஷேக் பரத்கர் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் குவித்தது.
- நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீடே, சாகிப் சுல்பிகர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஜிம்பாப்வேயில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிங்- சார்லஸ் களமிறங்கினர். இந்த ஜோடி நெதர்லாந்து அணியின் பந்து வீச்சை சுழபமாக எதிர் கொண்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரை சதம் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்தது.
சார்லஸ் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமர் ப்ரூக்ஸ் 25 ரன்னில் வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்திலேயே கிங் 76 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஹோப் - பூரன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தது. ஹோப் 47 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஷெப்பர்ட் 0 ரன்னிலும் ஹோல்டர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய பூரன் சதம் அடித்து அசத்தினார். அவர் 65 பந்துகளில் 104 ரன்னிலும் கீமோ பால் 25 பந்துகளில் 46 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீடே, சாகிப் சுல்பிகர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- 375 ரன்கள் அடித்தால் வெற்றி எந்த கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கியது.
- தேஜா நிடமானுரு-எட்வர்ட்ஸ் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்ச துவம்சம் செய்து ரன்கள் குவித்தது.
உலகக்கோப்பை தகுதி சுற்றில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நிக்கோலஸ் பூரன் 65 பந்தில் 104 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 375 ரன்கள் அடித்தால் வெற்றி எந்த கடினமான இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கியது. அந்த அணி ஒரு கட்டத்தில் 29.1 ஓவரில் 170 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு தேஜா நிடமானுருவுடன் எட்வர்ட்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்ச துவம்சம் செய்து ரன்கள் குவித்தது. எட்வர்ட்ஸ் 47 பந்தில் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தேஜா நிடமானுரு 76 பந்தில் 111 ரன்கள் விளாசினார். இதனால் நெதர்லாந்து அணி வெற்றியை நோக்கி சென்றது.
கடைசி ஓவரில் அந்த அணிக்கு ஒன்பது ரன்கள் தேவைப்பட்டது. முதல் ஐந்து பந்தில் எட்டு ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமநிலை ஆனது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நெதர்லாந்து விக்கெட்டை இழந்ததால் ஆட்டம் டையில் முடிந்தது.
இதையடுத்து ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதல் வாய்ப்பில் ஜேசன் ஹோல்டர் பந்து வீச, நெதர்லாந்தின் லோகன் வான் பீக் எதிர்கொண்டார். ருத்ர தாண்டவம் ஆடிய அவர், முதல் பந்தில் பவுண்டரி, இரண்டாவது பந்தில் சிக்சர் மூணாவது பந்தில் பவுண்டரி, நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் சிக்சர், ஆறாவது பந்தில் பவுண்டரி என முப்பது ரன்கள் விளாசினார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் 31 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் ஓவரை எதிர்கொண்டது. வான் பீக் பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் மூன்று பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக வான் பீக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் க்ரீவ்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- இலங்கை அணி தரப்பில் நிசங்காவும் அசலங்காவும் அரை சதம் விளாசினர்.
ஒருநாள் உலக கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் இன்று இலங்கை - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்து வீச்ச தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டகாரர்களாக பதும் நிசங்கா - கருரத்ணே களமிறங்கினர். 7-ரன் எடுத்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிசங்கா அரை சதம் அடித்தார். அவர் 75 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய அசலங்காவும் அரை சதம் விளாசி 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் க்ரீவ்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- பால் ஸ்டிர்லிங் 162 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
- அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது.
உலக கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொண்ட 6 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
இந்த தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட அயர்லாந்து - யுஏஇ அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக்பிரைன், ஸ்டிர்லிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மெக்பிரைன் 24 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து களம் இறங்கிய பால்பிரின், ஹேரி டெக்டர் ஆகியோர் அரைசதமும், மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பால் ஸ்டிர்லிங் 162 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுஏஇ அணி ஆடி வருகிறது.
- முதல் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை இலங்கை வீழ்த்தியது.
- 2வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றது.
ஹராரே:
உலக கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.
முதல் ஆட்டத்தில் இலங்கை, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்ச தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதம் அடித்த நிசங்கா 75 ரன்கள் எடுத்து வெளியேறினார். பொறுபுடன் ஆடிய அசலங்கா அரை சதம் விளாசி 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஸ்காட்லாந்து சார்பில் கிறிஸ் க்ரீவ்ஸ் 4 விக்கெட்டும், மார்க் வாட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 246 ரன்கள் இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் ஸ்காட்லாந்து அணி 29 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் அரைசதம் அடித்தார்.
இலங்கை அணி சார்பில் மகேஷ் தீக்சனா 3 விக்கெட்டும், ஹசரன்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
2வது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற யுஏஇ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து அதிரடியில் மிரட்டியது. பால் ஸ்டிர்லிங் 162 ரன்கள் அடிக்க அயர்லாந்து அணி 349 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய யு.ஏ.இ. 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் அயர்லாந்து 138 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அயர்லாந்து தான் ஆடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
ஏற்கனவே ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக கோப்பை கிரிக்கெட் தகுதிப்போட்டியில் சூப்பர் சிக்ஸ் சுற்று தொடங்கியது.
- இதன் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, ஓமன் அணிகள் மோதின.
புலவாயோ:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளும், பி பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் (4 புள்ளி) அணிகளும் முறையே முதல் 3 இடங்களை பிடித்து 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறின.
சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுடைய எதிர் பிரிவில் இருந்து முன்னேறிய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன், இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறும் 13-வது 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், சூப்பர் சிக்ஸ் சுற்று நேற்று நடந்தது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே, ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஓமன் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. சீன் வில்லியம்ஸ் 142 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய லாங்வே 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தொடர்ந்து ஆடிய ஓமன் அணி போராடி தோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரஜாபதி சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஓமன் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.