search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தலில்"

    • குமரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி மேலிட பொறுப்பாளர் சின்னத்துரை பேச்சு
    • கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.

    மார்த்தாண்டம்:

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் தலைமை தாங்கினார். அவை தலைவர் சிவ.குற்றாலம் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் கே.ஏ.சலாம் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி மேலிட பொறுப்பாளரும், மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளருமான தூத்துக்குடி சின்னத்துரை கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் தற்பொழுது ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்று வெளியில் சொல்லிக் கொள்கின்றனர்.

    மகளிர் உரிமை தொகை ரூ.1000 அனைவருக்கும் கொடுப்பதாக தேர்தலில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் தற்போது அனைவருக்கும் கொடுக்கவில்லை. மேலும் தற்பொழுது 1 அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறை மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஆய்வு செய்யப்பட்டு அதில் வருமானம் அதிகமாக இருந்தால் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆகையால் இது ஒரு மோசடி திட்டம் ஆகும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் தெளிவான பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

    இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, இளைஞரணி மற்றும் கட்சியில் இருந்து 19 பேரை ஒரு பூத்துக்கு நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். மேலும் 50 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் 810 கமிட்டிகள் உள்ளன. இதை சரியான முறையில் ஒருங்கிணைத்து நாம் திட்டமிட்டு பணியாற்றினால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். இதற்காக அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண் டும். அதன் பிறகு எடப்பாடி யார் சுட்டிக்காட்டுபவரே பிரதமராக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மேரி கமலபாய், அல்போன்சாள், ஒன்றிய செயலாளர்கள் நிமால், மணி, மெர்லியன்ட் தாஸ், ஜார்ஜ், சுதர்சன், அணிச் செயலாளர்கள் வக்கீல் அருள் பிரகாஷ் சிங், ரெஞ்சித், வினோஜ், மனோ, மகாஜி செல்வகுமார், ஜாண் மற்றும் நிர்வாகிகள் முத்தழகன், திருமலை யாண்டி பிள்ளை, முருகன், அண்ணா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சில்வெஸ்டர் நன்றி கூறினார்.

    • பலத்த போலீஸ் பாதுகாப்பு
    • 12 பதவிக்கு 42 பேர் களத்தில் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட திட்டக்குழுவுக்கு ஊரக உள்ளாட்சி சார்பில் 5 உறுப்பினர்களும், நகர உள்ளாட்சி சார்பில் 7 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12 பதவிக்கு 42 பேர் களத்தில் உள்ளனர்.

    ஊரக உள்ளாட்சி பதவிக்கு 5 உறுப்பினர்களை 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், நகர்ப்புற உள்ளாட்சி பதவிக்கு 7 உறுப்பினர்களை குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டு உறுப்பினர்கள், 4 நகராட்சி யில் உள்ள 98 வார்டு உறுப்பினர்கள், 51 பேரூராட்சியில் உள்ள 826 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்வார்கள். இதற்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங் கத்திலும், மாற்றுத்திறனாளி கள் நல அலுவலக கட்டிட முதல் மாடியில் அமைந்து உள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்திலும் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி யது.

    மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவல கத்தின் முதல் மாடியில் அமைந்துள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் 51 பேரூராட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்களும் வாக்குகளை பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் 3 பேர் வாக்களிக்க ஏற்பாடு கள் செய்யப்பட்டு இருந்தது.

    வாக்களிக்க வந்த கவுன்சிலர்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதுபோல் நாகர்கோவில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், குளச்சல், பத்ம நாபபுரம், கொல்லங்கோடு, குழித்துறை நகராட்சி மற்றும் 11 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களும் நாஞ்சில் கூட்டரங்கத்தில் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்களிக்க வந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களுக்கான அடையாள அட்டையை காண்பித்து வாக்களித்தனர்.

    வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட கவுன்சிலர்கள் 5 வாக்குகளும், மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் 7 வாக்குகளையும் செலுத்தினார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணி வரை நடக்கிறது.வாக்கு பதிவு மையத்திற்குள் கவுன்சிலர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    வாக்கு பதிவு முடிந்ததும் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகத்தின் முதல் மாடியில் அமைந் துள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் வாக்குகள் எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு வெற்றி பெற்றவர்கள் விபரம் தெரியவரும். திட்டக்குழு தேர்தல் நடைபெற்றதை யடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ×