search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேடி ராமாராவ்"

    • கொண்டா சுரேகாவின் பேச்சுக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை ரோஜா ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.
    • நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இச்செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும்.

    சமந்தா- நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனுமான கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று தெலுங்கானா பெண் மந்திரி கொண்டா சுரேகா அளித்த பேட்டி சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக கே.டி. ராமாராவ் அவதூறு வழக்க தொடர்வதாக கூறியுள்ளார்.

    கொண்டா சுரேகாவை கண்டித்த நடிகை சமந்தா அரசியலுக்காக என் பெயரை இழுக்க வேண்டாம் என கூறினார். மேலும் கொண்டா சுரேகாவின் பேச்சுக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை ரோஜா ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், தெலுங்கான அமைச்சர் கொண்டா சுரேகா பேச்சுக்கு நடிகர் நானி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியவதாவது:-

    எப்பேற்பட்ட முட்டாள்தனத்தையும் பேசி தப்பித்து விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர் ஊடகங்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளைப் பேசுவது சரியல்ல. நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இச்செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார். 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எனது விவாகரத்து என்பது என் சொந்த விஷயம். அது பரஸ்பர அங்கீகாரத்துடன் நடைபெற்றது.
    • கொண்டா சுரேகா தயவு செய்து எனது விவாகரத்து பற்றி ஏளனமாக நினைக்க வேண்டாம்.

    சமந்தா- நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனுமான கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று தெலுங்கானா பெண் மந்திரி கொண்டா சுரேகா அளித்த பேட்டி சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக கே.டி. ராமாராவ் அவதூறு வழக்க தொடர்வதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அரசியலுக்கான என் பெயரை இழுக்க வேண்டாம் என சமந்தா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சமந்தா கூறியிருப்பதாவது:-

    எனது விவாகரத்து என்பது என் சொந்த விஷயம். அது பரஸ்பர அங்கீகாரத்துடன் நடைபெற்றது. விவாகரத்தில் எந்தவித அரசியல் சதியும், குறுக்கீடும் இல்லை. கற்பனைகளை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    கொண்டா சுரேகா தயவு செய்து எனது விவாகரத்து பற்றி ஏளனமாக நினைக்க வேண்டாம். அடுத்தவர்களின் சொந்த விஷயங்களைப் பற்றி பேசும்பொழுது பொறுப்பாக இருக்க வேண்டும். தயவுசெய்து என் பெயரை அரசியலுக்கு இழுக்க வேண்டாம். நான் எப்பொழுதும் அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் இருப்பேன்.

    என சமந்தா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, நாகர்ஜுனா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை எதிரிகளை விமர்சிக்கப் பயன்படுத்தாதீர்கள்.

    தயவுசெய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள், குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.
    • மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது என்றார் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர்.

    ஐதராபாத்:

    பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.எல்.சி.க்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினர்.

    இந்நிலையில், பி.ஆர்.எஸ். கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாரதி ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருகிறோம்.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். சமீபத்திய கட்சித் தாவல்களின் பிரதிபலிப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களான அனைவரையும் சந்திப்போம்.

    ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதுபோல் ஆஸ்கார் லெவலில் செயல்படுகிறார்.

    பா.ஜ.க மற்றும் காங்கிரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் கட்சி மாறுதலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றுடன் நிறைவு பெற்றது.
    • வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியானது.

    ஐதராபாத்:

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இதற்கிடையே, 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன்படி, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு ஓங்கும் என தெரிகிறது.

    இந்நிலையில், தெலுங்கானா மந்திரி கே.டி.ராமாராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கருத்து கணிப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. 70 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மீண்டும் சந்திரசேகர ராவ் முதல் மந்திரி ஆவார். கடந்த 2018- தேர்தலின் போது இதேபோன்று எங்களுக்கு பாதகமான கருத்து கணிப்புகள் வெளியாயின. ஆனால் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அதேபோல் இம்முறையும் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • அங்கு ஆட்சியைப் பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவிரமாக தேர்தல் வேலை செய்துவருகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

    தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவிரமாக தேர்தல் வேலை செய்து வருகிறது.

    இந்நிலையில், ஊழலில் மூழ்கித் திளைக்கும் காங்கிரஸ் கட்சி ஊழல் பற்றி பேசலாமா? என ராகுல் காந்திக்கு முதல் மந்திரி மகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாது, அவர் 'பப்பு'. இன்று ராகுல் காந்தி வந்திருந்த இடம், அதே நிஜாமாபாத் தான். ராகுல் காந்தியின் பெரியப்பா நேரு அவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே கட்டாயத் திருமணம் செய்து வைத்தார். இங்குள்ள மக்களுக்கு காங்கிரசின் வரலாறு முழுமையாக தெரியும். தெலுங்கானா வரலாறு பற்றி ராகுல் காந்திக்கு இருக்கும் அறிவிற்காக வருத்தப்படுகிறேன். இன்று ஊழல் பற்றி ராகுல் காந்தி பேசினால் மக்கள் சிரிப்பார்கள். ஏனெனில் காங்கிரஸ் கட்சி ஊழலில் மூழ்கி கிடக்கிறது என கடுமையாக சாடினார்.

    • தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். வேட்புமனுவை வாபஸ் பெற நவம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகும்.

    தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் கஜ்வெல் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவரும், தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கே.டி.ராமாராவ் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    நிஷமாபாத் மாவட்டம் அர்மூர் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக அவர் வேனில் சென்றார் அப்போது, வேன் டிரைவர் திடீரென பிரேக்கை பிடித்தார்.

    இதை எதிர்பாராத அமைச்சர் கே.டி.ராமாராவ் மற்றும் அவருடன் நின்றிருந்தவர்களின் சிலர் கீழே விழுந்தனர். இதில் அமைச்சர் கே.டி.ராமாராவ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • கட்சிகளை அல்ல மக்களை ஒன்றிணைப்பதுதான் முக்கியம்.
    • 3-வது அணியே இப்போது தேவை.

    புதுடெல்லி :

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகனும், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மந்திரியுமான கே.டி. ராமாராவ் டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 2 தேசிய கட்சிகளும் தேசத்திற்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன. அவற்றை முழுமையாய் வைத்திருப்பதில் அர்த்தமில்லை. கட்சிகளை அல்ல மக்களை ஒன்றிணைப்பதுதான் முக்கியம். இதற்கு முன்னரும் கட்சிகள் ஒன்றிணைந்து தோல்வியடைந்தன. இந்த 2 தேசிய கட்சிகளுடன் மற்ற கட்சிகளும் இணைந்தால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் எந்த கூட்டணியும் வெற்றி பெறாது. அந்த 2 கட்சிகளும் இல்லாத 3-வது அணியே இப்போது தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×