search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் நிதி"

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • தவணைகள் முடிந்த பிறகும் ஆட்டோவின் பெர்மிட் திரும்ப கொடுக்கவில்லை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்தவர் சுந்தர். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஆட்டோ வாங்குவதற்காக கடன் வாங்கினார். இதற்காக அவர் தவணைகள் மூலம் வட்டியும் அசலுமாக கடன் தொகை முழுவதையும் செலுத்தி விட்டார். ஆனால் தவணைகள் முடிந்த பிறகும் ஆட்டோவின் பெர்மிட் திரும்ப கொடுக்கவில்லை. எனவே வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் கன்னியாகுமரி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ஆட்டோவின் பெர்மிட், நஷ்ட ஈடு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2 ஆயிரத்து 500 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

    ×