என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆசிரியர் பணியிடங்கள்"
- இந்தியாவுக்கு ரஷியா அதிக உதவிகள் செய்துள்ளது.
- ஆசிரியர் சங்கங்களுடன் தனித்தனியாக பேசி இருக்கிறோம்.
சென்னை:
கொரோனா காலத்தில் முடங்கி இருந்த மாணவ-மாணவிகளை மேம்படுத்தும் விதமாக "ராக்கெட் சயின்ஸ்" என்ற பெயரில் ஆன்லைன் பயிற்சி திட்டம், 2022-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தொடங்கப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மூத்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பயிற்சி அளித்தார்.
தற்போது அதில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களில் சிலர் ரஷியாவில் உள்ள "யூரி ககாரின்" விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட இருக்கின்றனர். ரஷிய விண்வெளி ஏவுதளத்தை பார்வையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 50 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மைய வளாகத்தில் நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவுக்கு ரஷியா அதிக உதவிகள் செய்துள்ளது. அங்கு நம் பள்ளி மாணவர்கள் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. எந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்டவைகளை கற்றுக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
விஞ்ஞானி சிவதானு பிள்ளை போல் பலர் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டுவரும் நிலையில் அரசு சார்பிலும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
ஆசிரியர் சங்கங்களுடன் தனித்தனியாக பேசி இருக்கிறோம். அவர்களின் 10 கோரிக்கைகள் தொடர்பாக நிதி அமைச்சருடன் பேச இருந்தோம். ஆனால் முதலமைச்சருடன் அவர் சந்திக்க வேண்டியிருந்ததால், எங்களுடைய சந்திப்பு தள்ளிப்போனது.
திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்தபோதுகூட நிதி அமைச்சரிடம் அது பற்றி பேசியிருக்கிறேன். அவர் சென்னை வந்த பிறகு, நானும், எங்கள் துறை முதன்மைச்செயலாளரும் இணைந்து பேசி முதலில் எந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது என்பது பற்றி ஆலோசித்து, முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
ஆசிரியர் பணியிடங்கள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்புகள் வர உள்ளது. மிக விரைவில் அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவரிடம், 'தமிழ்நாட்டின் கல்வித்துறை சி.ஆர்.எஸ். நிதியையும், மத்திய அரசு கொடுக்கும் நிதியையும் சரியாக பயன்படுத்துவதில்லை என்று கவர்னர் கூறியிருக்கிறாரே?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'மத்திய அரசு வழங்கக்கூடிய நிதியை அதிகளவில் நல்ல விஷயத்தில் பயன்படுத்தக்கூடிய துறை பள்ளிக்கல்வித்துறைதான். கவர்னர் எதில் சரியாக நிதியை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டு சொன்னால், அதற்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். அதேபோல், சி.ஆர்.எஸ். செயல்பாட்டை பொறுத்தவரையில், நல்ல விஷயத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் அது. நல்ல விதத்தில் அது பயன்படும்' என்றார்.
- தொண்டி அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும்.
- மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் சமீமா பீவி, மஹ்ஜபின் சல்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர் தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் வரவேற்றார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில், கடந்த 4ஆண்டுகளாக இப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. எண்ணும், எழுத்தும், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் உள்ள நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவ-மாணவிகளின் கல்வித்தரம் குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த பற்றாக்குறையை எப்போது நிவர்த்தி செய்யப்படும்? என ேகள்வி எழுப்பினர். அப்போது தலைமை ஆசிரியை, இதுகுறித்து கல்வி அதிகாரி களிடம் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும், அவர்கள் பற்றாக்குறையை சரி செய்வார்கள் என்றும் கூறினார்.
அப்போது உறுப்பினர்கள், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இதே பதில்தான் கூறப்படு வதாகவும், உடனடியாக ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாவிட்டால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்போம் என்றும் கூறினர்.
ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிரப்ப வேண்டும், இடியும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து, புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஆசிரியைகள் புஷ்பா, இஸ்மத் ராணி உட்பட இல்லம் தேடி கல்வி ஆசிரியைகள் கலந்து கொண்டனர். ஆசிரியை சுபஸ்ரீ நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்