என் மலர்
நீங்கள் தேடியது "ஆழ்வார்"
- பாசுரங்களில் பெருமாள் மனம் லயித்ததாக பல சான்றுகள் உள்ளன.
- காஞ்சியில் உள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள், ஆழ்வார் பின்னாடியே சென்று விட்டதாக வரலாறு உள்ளது.
திருமழிசை ஆழ்வார் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் சக்கர அம்சமாக தோன்றியவர். 4-வது ஆழ்வாரான இவர் சைவம், வைணவம் இரண்டிலும் ஈடுபட்டு பாடல்கள் இயற்றினார்.
சைவத்தில் சிவவாக்கியர் ஆயிரம் என்ற பதிகத்தை இயற்றினார். இவரது சொல்லாற்றாலை கண்டு வியந்த சிவன் இவருக்கு ''பக்திசாரர்'' என்ற சிறப்பை அளித்தார்.
கால் கட்டை விரலில் இவர் ஞானக்கண் பெற்றிருந்தார். இவரது பாசுரங்களில் பெருமாள் மனம் லயித்ததாக பல சான்றுகள் உள்ளன.
ஸ்ரீரங்கம், அன்பில், திருப்பேர்நகர், கும்பகோணம், கவித்தலம், திருக்கோட்டியூர், திருக்கூடல், திருக்குறுங்குடி, திருப்பாடகம், திருவூரகம், திருவெக்கா, திருவள்ளூர், திருப்பதி, திருபாற்கடல், துவாரகை, பரமபதம் ஆகியவை இவர் பாடல் பெற்ற தலங்களாகும்.
ஒரு தடவை இவர் தன் சீடர் கனி கண்ணனுடன் காஞ்சியில் தங்கி இருந்தார். அப்போது அந்நகரின் மன்னன் பல்லவராயன் தன்னை வாலிபனாக்கும்படி ஆழ்வாரிடம் கேட்டார். ஆழ்வார் மறுக்கவே அவரை நகரில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
உடனே திருமழிசை ஆழ்வார், ''துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன். நீயுமுன் கைநாகப்பாய் சுருட்டிக் கொள்'' என்று பாடி விட்டு சென்றார். இதனால் காஞ்சியில் உள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள், ஆழ்வார் பின்னாடியே சென்று விட்டதாக வரலாறு உள்ளது.
திருமலையில் இருந்த பேயாழ்வார் கேட்டுக் கொண்டபடி இவர் தன் இறுதி காலத்தில் திருமழிசையில் தங்கி இருந்து 200 பாசுரங்கள் பாடினார். பிறகு கும்பகோணத்தில் முக்தியானார். திருமழிசை தலத்தில் இவரை வழிபட்டால் சைவ, வைணவ தலங்களில் பெறக்கூடிய பலன்களை பெறலாம்.
- பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை
- பவித்ர உற்சவம் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளா கத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் பவித்ர உற்சவம் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த திருவிழா 25-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
இந்த பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் ஆகம ஆலோச கர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லில் உள்ள 7 அர்ச்சகர்கள் நடத்துகிறார்கள். பவித்ர உற்சவம் நடப்பதற்கு முன்பு கோவிலில் ஆழ்வார் திரு மஞ்சனம் நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம். அதன்படி நாளை மறுநாள் (20-ந்தேதி) ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. இதை யொட்டி அன்றைய தினம் காலை 6 மணி முதல் 8 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுகிறது. இந்த 2 மணி நேரம் பக்தர்கள் கோவி லுக்குள் தரிச னத்துக்கு செல்ல அனும திக்கப்பட மாட்டார்கள். இந்த தகவலை கன்னியா குமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி தெரிவித்து உள்ளார்.
- பல்வேறு இடங்களில் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு முறையாக மூடப்படாமலேயே உள்ளது.
- வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் குடிநீருக்காக நடுரோட்டில் தோண்டப்பட்ட பள்ளம் நீண்ட நாட்களாக மூடப்படாமல் திறந்தே கிடப்பதால் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆழ்வார் திருநகர், சரஸ்வதி நகர் 4-வது தெரு சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. இதன் பின்னர் இணைப்புக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஆனால் சரியான முறையில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் செல்லாத காரணத்தால் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. சுமார் 6 அடி ஆழமுள்ள இந்த பள்ளத்தை தோண்டி சில நாட்கள் வேலை செய்தனர். இதன் பிறகு இந்த பள்ளத்தை அப்படியே போட்டுவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர்.
இதன் காரணமாக அங்கு வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் செல்லும் அளவுக்கே அந்த சாலையில் தற்போது இடம் உள்ளது. சிறுவர், சிறுமிகளும் சைக்கிளில் வெளியில் செல்கிறார்கள்.
அவர்கள் பல நேரங்களில் பள்ளத்தையொட்டி குவிந்து கிடக்கும் மணல் மேட்டில் சிக்கி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை புகார் அளிக்கப்பட்டும் பள்ளத்தை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆளை விழுங்கும் அளவுக்கு உள்ள ஆபத்தான பள்ளத்தை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு முறையாக மூடப்படாமலேயே உள்ளது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். கேபிள் மற்றும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் விபத்துகளையும் ஏற்படுத்தி வருகின்றன.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் எந்தெந்த பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்களால் சாலைகள் பழுதாகி கிடக்கின்றன என்பதை கண்டுபிடித்து உடனடியாக அவைகளையும் ஒழுங்காக மூடி சரி செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் விருப்பமாக உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி ஆழ்வார் திருநகர் போன்று பல்வேறு இடங்களிலும் திறந்து கிடக்கும் பள்ளங்களை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.