என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மக்கள் குற்றம்சாட்டு"
- தெருவில் மாநகராட்சி சார்பில் புதியதாக தார் சாலை போடும் பணி நடைபெற்றது.
- இந்த நிலையில் இன்று சரியாக சுத்தம் செய்யாமல் தார்சாலை போடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி ஒன்று திரண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி ராஜராஜன் நகர் 1-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் மாநகராட்சி சார்பில் புதியதாக தார் சாலை போடும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று சரியாக சுத்தம் செய்யாமல் தார்சாலை போடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி ஒன்று திரண்டனர்.
உடனடியாக இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர், மாநகராட்சி சார்பில் வார்டு எண் 29 முதல் 41 வரையிலான 13 வார்டுகளில் 23 சாலைகள் ரூ.1.80 கோடி மதிப்பில் போடப்பட்டு வருகிறது.
அதில் இந்த ஒரு இடத்தில் மட்டும் தார் சாலை போடுவதற்கு முன் குறைந்த அளவில் சுத்தம் செய்யப்பட்டது. எனவே முழுமையாக சுத்தம் செய்து தார் சாலை போடப்படும் என்று உறுதி அளித்தார்.
இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.