என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏகாதசி விரதம்"

    • ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம்.
    • ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார்.

    ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப பழைய காலத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி, ஆனி இந்த மூன்று மாதங்களில் இருக்கக் கூடிய காய்ச்சல் முடிந்து ஆடி மாதத்தில் நன்றாக மழைபொழிந்து எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் வரும். இந்த புது வெள்ளத்துடன் வரக்கூடியதுதான் ஆடிப்பெருக்கு.

    சங்க நூல்களில்பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப்பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேடமானது. பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப்பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

    ஆடி 18-ம்பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.

    இதனால்தான் இந்த நாட்களில் இது போன்றெல்லாம் செய்வது செய்ய வேண்டிய பழக்கத்தை நம் மூதாதையர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

    ஏகாதசி விரதம் இருக்கும் முறை

    ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும்.

    அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள்,பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது.

    இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணுபற்றிய நூல்களைபடிக்கலாம்.

    இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம்பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று 'பாரணை' என்னும் விரதத்தை மேற்கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

    • ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று அக்னி புராணம் கூறுகிறது.
    • பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிப்பட்ட நாள் ஏகாதசி.

    ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று அக்னி புராணம் கூறுகிறது.

    இந்நன்னாளில் விரதம் இருப்போருக்கு திருமாலே பரமபத வாசலைத் திறந்து வைத்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.

    விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம் என்று உமையவளிடம் பரமசிவனே கூறுகிறார்.

    பல்வேறு புராணங்கள் ஏகாதசி விரதத்தின் பெருமையையும், அதனால் அளப்பரிய நலனைப் பெறலாம் என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றன.

    பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிப்பட்ட நாள் ஏகாதசி.

    அந்த அமிர்தத்தைப் போன்று விஷ்ணுவின் அருளை நமக்கு அளிக்கக்கூடிய விரதம் ஏகாதசி விரதம்.

    இந்த விரதத்தை எவரெல்லாம் மேற்கொள்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா வகையிலும் மேன்மை உண்டாகும்.

    அவர்களுக்கு மரண பயமோ நரக வாசமோ இல்லை.

    • ஆமலகி ஏகாதசி செல்வ வளத்தையும், வெற்றிகளையும் தரக்கூடியது.
    • பகவான் ஸ்ரீமன் நாராயணனை துதிக்க வேண்டும்.

    மாசி மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை இரண்டிலுமே வரும் ஏகாதசி தனித்துவமானவை. இந்த ஏகாதசிகளில் விரதமிருந்தால் திருமாலின் அருள் பரிபூரணமாகக்கிடைக்கும். வாழும் போதே துன்பங்கள் இன்றி, இன்பமான வாழ்க்கை வாழ வழிசெய்யும். மாசி மாதம் வளர்பிறையில் வரும் ஆமலகி ஏகாதசி செல்வ வளத்தையும், வெற்றிகளையும் தரக்கூடியது.

    இந்த ஏகாதசியில் விரதம் இருந்து, நெல்லி மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால், வீட்டில் உள்ள பணம் தொடர்பான பிரச்னைகள் நீங்கி, செல்வச் செழிப்பு ஏற்படும். ஏகாதசி உபவாசம் இருந்து பகவான் ஸ்ரீமன் நாராயணனை துதிக்க வேண்டும். அன்று இந்த பாசுரம் பாடலாம்.

    ``சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்

    சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து

    ஆர்வினவிலும் வாய் திறவாதே

    அந்தகாலம் அடைவதன்முன்னம்

    மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து

    மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி

    ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு

    அரவதண்டத்தில் உய்யலும்ஆமே''.

    • ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான்.
    • ஸ்ரீ ரங்கத்தில் சந்தன மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறும்.

    மகாவிஷ்ணுவின் அருளை வாரி தரும் ஏகாதசி விரதம். ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான். நாம் இருக்கும் விரதங்களில் ஏகாதசி விரதம்தான் அதிகம் புண்ணியம் அளிக்கும் விரதமாக கருதப்படுகிறது. இன்று ஸ்ரீ ரங்கத்தில் நம் பெருமாளுக்கு சந்தன மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறும்.

    ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் என விஷ்ணு புராணம் நமக்கு விளக்குகிறது. திதிகளில் பதின்றொவது திதியாக வருவது ஏகாதசி, வளர்பிறை, தேய்பிறை முறையே ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இப்படி ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன. அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள், சிறப்பு பலன்கள் உள்ளன.

    அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் காலை பூஜை செய்த பின் விரதம் முடிக்க வேண்டும். விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.

    தேவையுள்ள எளியவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்யலாம். ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். உங்கள் வீட்டின் அருகே ஏதேனும் நெல்லிமரம் உண்டெனில் அதற்கு தீபாராதனை, தூபராதனை காட்டி வழிபடுங்கள். இந்த பாசுரத்தை சொல்லி வழிபடுங்கள்.

    `துப்புடையாரை அடைவதெல்லாம்

    சோர்விடத்துத் துணையாவ ரென்றே

    ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்

    ஆனைக்குநீ அருள்செய் தமையால்

    எய்ப்புஎன்னை வந்துநலியும்போது

    அங்குஏதும் நானுன்னை நினைக்க

    மாட்டேன்

    அப்போதைக்கு இப்போதே சொல்லி

    வைத்தேன்

    அரங்கத் தரவணைப் பள்ளியானே!'

    • பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி அமலாகி ஏகாதசி .
    • ஏகாதசி அன்று விரதம் இருப்பது நிலையான பலனைத் தரும்.

    `அமலாகி' என்றால் நெல்லிக்காய். பத்மபுராணத்தின் படி, நெல்லிக்காய் மரம், விஷ்ணுவுக்கு உரியது. இந்த மரத்தில், ஸ்ரீஹரியும், லட்சுமி தேவியும் வசிக்கிறார்கள். இதன் காரணமாக, அமலாகி ஏகாதசி நாளில், விஷ்ணுவை அம்லா (நெல்லி) மரத்தடியில் அமர்ந்து வழிபடுகின்றனர். பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி அமலாகி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இது, "ஆம்லா ஏகாதசி'' என்றும், "ரங்பர்னி ஏகாதசி'' என்றும் அழைக்கப்படுகிறது.

    மார்ச் 20,2024 புதன்கிழமை, அமலாகி ஏகாதசி. ஏகாதசி திதி ஆரம்பம். மார்ச் 20, 2024 மதியம் 12:21 மணிக்கு ஏகாதசி திதி முடிவடைகிறது. அமலாகி ஏகாதசி அன்று விரதம் அனுசரித்து, பகவான் ஸ்ரீமன் நாரயணனை வணங்குவதன் மூலம், அனைத்து பாவங்களில் இருந்தும் விமோசனம் கிடைக்கும். ஏகாதசி அன்று, விரதம் இருப்பது நிலையான பலனைத் தரும்.

    மகாபாரதத்தில் கிருஷ்ணர், யுதிஷ்டிரருக்கு ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். இன்று விரதம் இருந்து, நாளை துவாதசி பாராயணம் செய்ய வேண்டும். அப்போதுதான் முழுபலன் கிட்டும்.

    • பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம்.
    • பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.

    ஏகாதசியன்று அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்ய வேண்டும்.

    நித்ய கர்மங்களை விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும்.

    ஏகாதசியன்று துளசி இலை பறிக்கலாகாது. ஆதலால் முதல் நாளே பூஜிப்பதற்கு அதை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    மகா விஷ்ணுவுக்கு வேத விதிப்படி பூஜை செய்ய வேண்டும்.

    அன்று சக்தியிருப்பின் நிர்ஜலமாக இருப்பது உத்தமம்.

    பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம். பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.

    ஒரு வேளை அரிசியை வறுத்து அன்னமாக உட்கொண்டு இரவு உபவாசமிருப்பது அகமாதமம்.

    பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம். பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.

    ஒரு வேளை அரிசியை வறுத்து அன்னமாக உட்கொண்டு இரவு உபவாசமிருப்பது அகமாதமம்.

    சக்தியில்லாவர் கடைசி வழியை பின்பற்றலாம். அன்று எவருக்கும் அன்னதானம் செய்யக்கூடாது. பகலில் தூங்கக்கூடாது.

    இரவில் பகவத் பஜனை அல்லது புண்ய கதாச்ரவணம் முதலியவைகளால் கண்விழிக்க வேண்டும்.

    கோபம், பரநிந்தை, க்ரூரமான வார்த்தை, கலஹம், தாம்பூலம், சந்தனம், மாலை, கண்ணாடி பார்த்தல், ஸ்த்ரீ ஸங்கம் முதலியவைகளை விட வேண்டும்.

    எப்போதும் அவர் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.

    துவாதசியன்று காலைக்கடனை முடித்து பகவத் பூஜை செய்ய வேண்டும்.

    ஓர் அதிதிக்கு அன்னமளித்து நாம் பூஜிக்க வேண்டும்.

    அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக் காய் இவைகளை அவசியம் பூஜிக்க வேண்டும்.

    இங்ஙனம் ஓர் பக்ஷத்திற் கோர்முறை ஏகாதசி உபவாசமிருந்தால் தேக ஆரோக்கியம் உண்டாகும்.

    பாபம் அகலும், சந்ததி, செல்வம் பெருகும், சுவர்க்கம் கிட்டும். மனம் நிர்மலமாகும். ஞானம் சுரக்கும். மோட்ச நந்தம் பெறுவர்.

    ஏகாதசி விரதம் அன்று செப்புக் கிண்ணியில் ஜலம் வைத்து அதில் துளசி தளம் போட்டு வைத்து நீர் மட்டும் பருகுவார்கள்.

    ஒரு சிலர் "நிர்ஜலோபவாசம்" அதாவது ஜலமின்றி உமி நீர்க் கூட பருகாமல் இருப்பதுண்டு.

    ஏகாதசி விரதம் எல்லோருக்கும், முக்கியமாக மத்வமதஸ்தர்கள் வெகு சிறப்பாக அனுஷ்டானம் செய்வார்.

    "ஏகாதசி மரணம், துவாதசி தகனம்" என்ற பழமொழிப்படி ஏகாதசி திதியில் ஒருவன் காலமாவதும், அடுத்த திதியாகிய துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண் ணிய பலமாக கூறுகிறது.

    ஏகாதசி உபவாச மிருந்து, துவாதசி அதிகாலையில் நீராடி இறைவனைப் பூஜித்து ஒருவருக்கு வஸ்திரம், அன்னதானம், தாம்பூலம், தட்சிணை வழங்குவது மிகச்சிறந்த பலனை அளிக்கிறது.

    • பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.
    • தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு “ஏகாதசி” என்று பெயரிட்டார்.

    "முரன்" என்றொரு அசுரன் இருந்தான்.

    தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.

    அதோடு, எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில், இந்திரலோகத்தின் மீது படையெடுத்தான்.

    முரனை எதிர்கொள்ள முடியாத இந்திரன், சிவபெருமானிடம் சரண் அடைந்தார்.

    அவரோ திருமாலிடம் செல்லச் சொன்னார். இந்திரன், தேவர்களுடனும், முனிவர்களுடனும் திருமாலிடம் சென்று சரணடைந்தார்.

    அவர்களைக் காப்பதற்காக, இந்திரன் மற்றும் தேவாதி தேவர்கள் சூழ, முரனுடன் திருமால் போரிட்டார்.

    தனி ஒருவனாக நின்று அனைவரையும் சிதறி ஓடச் செய்த முரன், திருமாலுடன் கடுமையாகப் போரிட்டான்.

    பல ஆண்டுகள் கடுமையாகப் போர் நடந்த போதிலும் முரனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

    சங்கு சக்கரம் முதலான ஐந்து வகை ஆயுதங்களைப் பிரயோகித்தும் முரனை அழிக்க முடியவில்லை.

    பல ஆண்டுகள் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பால், திருமால் இமயமலையில் உள்ள பத்ரிகாசிரமம் சென்று அங்கு அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த சிம்ஹாஹி என்னும் குகையில் பள்ளி கொண்டார்.

    அவரைப் பின் தொடர்ந்து வந்த முரன், குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திருமாலைக் கொல்வதற்காக, தன் உடைவாளை உருவினான்.

    அப்போது, திருமாலின் உடலிலிருந்து தர்மதேவதை கன்னியாக வெளிப்பட்டு அவனை எதிர்த்து நின்றாள்.

    முரன் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராவதற்குள், அவனைத் தன்னுடைய பார்வையால் எரித்துச் சாம்பலாக்கினாள்.

    பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.

    தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு "ஏகாதசி" என்று பெயரிட்டார்.

    மார்கழி மாதம், கிருஷ்ண பட்சத்தில் (அமாவாசையில்) ஒன்றும், சுக்ல பட்சத்தில் (பவுர்ணமியில்) ஒன்றுமாக இரண்டு ஏகாதசிகள் வரும் என்றும் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு "உற்பத்தி ஏகாதசி" என்று அருளினார்.

    • இந்த ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது.
    • அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.

    இந்த ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது.

    அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.

    கம்பம் என்ற நகரில் வைகானசன் என்ற அரசன் வாழ்ந்து வந்தான்.

    ஒரு நாள், கனவில் அவனுடைய பெற்றோர்கள் நரகத்தில் இருப்பது போலவும், அதிலிருந்து தங்களை விடுவிக்குமாறு அவனிடம் அழுது முறையிடுவது போலவும் கண்டான்.

    இதற்கு ஏதாவது பரிகாரம் உடனே செய்ய வேண்டும் என வைகானசன் முடிவு செய்தான்.

    காட்டில் கடும் தவம் புரிந்து வந்த முனிபுங்கர் என்ற முனிவரைச் சந்தித்து அவன் ஆலோசனைக் கேட்டான்.

    தன்னுடைய ஞானதிருஷ்டியால் உண்மையை அறிந்த முனிவர் வைகானசனிடம், "நீ, உன் மனைவி, குழந்தைகளுடன் ஏகாதசி விரதமிருந்து அதை உன் மூதாதையர்களுக்க அர்ப்பணம் செய்" என்று ஆலோசனை கூறினார்.

    அவனும், அவ்வாறே செய்ய, அதன் பலனாக, அவனுடைய பெற்றோர்கள் நரகத்திலிருந்து விடுபட்டு மைந்தனை வாழ்த்தி, சொர்க்கம் புகுந்தனர்.

    அதனால்தான், பெற்றோரை இழந்தவர்கள், இவ்விரதத்தை மேற்கொண்டு, அதன் பலனை அவர்களுக்கு அர்ப்பணிக்கின்றனர்.

    அமாவாசையிலிருந்தும், பவுர்ணமியிலிருந்தும் பத்தாவது நாள் தசமி. அதற்கடுத்த நாள் ஏகாதசி.

    ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி.

    • பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது.
    • ஏகாதசியன்று, எக்காரணத்தைக் கொண்டும், துளசி இலையை பறிக்கக்கூடாது

    ஏகாதசி விரதமிருப்பவர்கள், அதற்கு முன் தினமான தசமியன்று, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ஏகாதசியன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.

    ஏகாதசியன்று இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்த பிரசாதங்கள் கிடைத்தால் கூட சாப்பிடக்கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன.

    அதே போல, ஏகாதசி விரதம் இருப்பவரைப் பலவந்தப்படுத்தி உண்ணச் செய்பவன் நரகத்திற்குச் செல்வது உறுதி என்கின்றன.

    அதன்பின், ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று, அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி, சூரிய உதயத்திற்கு முன் பாரணை (விரதத்தை உணவு உட்கொண்டு முடித்து கொள்வது) செய்ய வேண்டும்.

    பாரணையில், அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவைகளுடன் நல்ல காய்கறிகளையும் சேர்த்து, உணவு சமைக்க வேண்டும்.

    பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது.

    ஏகாதசியன்று, எக்காரணத்தைக் கொண்டும், துளசி இலையை பறிக்கக்கூடாது. எனவே, தேவையான துளசி இலையை, முன்தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    • அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும்.
    • மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    இந்த விரதத்தை மேற்கொண்டு தேவர்களும், முனிவர்களும் திருமாலின் அருளைப் பெற்றனர்.

    சகல சௌபாக்கியங்களோடு உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.

    சிவபெருமானே பார்வதி தேவிக்கு இவ்விரதத்தின் மகிமை பற்றி கூறினார் எனில், கூறுவதற்கு வேறு சிறப்பு இல்லை.

    கிருஷ்ண பட்சத்தில் வரும் உற்பத்தி ஏகாதசியைப் போல, சுக்ல பட்சத்தில் வரும் மற்றொரு ஏகாதசி, "மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பார்கள்.

    வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.

    திருமால் ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் எனப்படும் கதவுகள் திறக்கப்படும்.

    அதன் வழியாக ஆலயத்திற்குள் சென்று திருமாலை வழிபட வேண்டும்.

    திருமாலை வேண்டி இருக்கும் இவ்விரதத்தன்று, காலையில் எழுந்து நீராடிவிட்டு, திருமால் கோவிலுக்கோ அல்லது வீட்டிலேயோ திருமாலின் படத்தின் முன் அமர்ந்தோ, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும்.

    பின், ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் பாரணை செய்ய வேண்டும்.

    அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும்.

    மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    • மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
    • அன்றுதான், அர்ஜூன னுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா.

    ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்ற வாக்கியமே ஏகாதசி விரதத்தின் மகிமையை நமக்கு சொல்லும்.

    மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

    அன்றுதான், அர்ஜூன னுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா.

    இந்த நாளை, கீதா ஜெயந்தி என்று கொண்டாடுகின்றனர்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆதிதிருவரங்கம் ஆலயம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்பதி மற்றும் அனைத்து வைஷ்ணவ திவ்ய தேசங்களிலும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.

    அதனை தொடர்ந்து சென்னை பார்த்தசாரதி திருக்கோவில், திருமயிலை கேசவ பெருமாள், மாதவ பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் போன்ற வைஷ்ணவ ஸ்தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும்.

    விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்ணுவை அதிதேவதையாக கொண்ட புதன் கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும்.

    மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும்.

    எனவே வைகுண்ட ஏகாதசி தினத் தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயனம் செய்து அந்த பரந்தாமனின் அருளை திருப்பாவையின் நீங்காத செல்வம் நிறைந் தேலொ ரெம்பாவை என்பதற்கிணங்க நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை வாழலாம்.

    • பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் அரங்கநாதரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
    • முன்னதாக, அதிகாலை அரங்கநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஆதி திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் பரமபதவாசல் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

    பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் அரங்கநாதரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

    முன்னதாக, அதிகாலை அரங்கநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

    5 மணிக்கு நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க, ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதர், பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார்.

    அப்போது, அங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா - கோவிந்தா என கோஷம் எழுப்பி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    தொடர்ந்து, மைய மண்டபத்தில் மூன்று முறை வலம் வந்த அரங்கநாதர், பின்னர் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    ×