search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்னர்"

    • பிரிகோஜின் பயணம் செய்த தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியது.
    • கடந்த மாதம் அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பிரிகோஜின் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

    ஷியாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு விசாரணைக் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

    இது குறித்து ரஷியாவின் விசாரணைக் குழு செய்தித் தொடர்பாளர் வெட்லனா பெட்ரென்கோ அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த புதன் கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் மீட்கப்பட்ட பத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை அனைத்தும் விமானத்தில் பயணம் செய்த பத்து பேருடையது தான் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    ரஷியாவின் வான் போக்குவரத்து ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட தகவல்களில் பிரிகோஜினின் தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியதாகவும், இந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்கள் பட்டியலில் பிரிகோஜின் பெயர் இடம்பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விபத்தில் சித்திய விமானத்தில் பிரிகோஜின் தவிர விமானி மற்றும் ஏழு பயணிகள் பயணம் செய்தனர். அந்த வகையில், விமானம் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி சென்று கொண்டிருந்த போது நடுவழியில் வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன்- ரஷியா போரில் பெலாரஸ் ரஷியாவுக்கு உதவு செய்து வருகிறது
    • பெலாரஸ் அண்டை நாடுகளான போலந்து லிதுவேனியா பாதுகாப்பை அதிகரித்துள்ளது

    உக்ரைன்- ரஷியா இடையே 17 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ரஷியாவுக்கு அண்டை நாடான பெலாரஸ் ஆதரவாக உள்ளது. அதேவேளையில் லிதுவேனியா, போலந்து நாடுகள் நேட்டோ படையில் உள்ளது. இதனால் எல்லையில் லிதுவேனியா மற்றும் போலந்து நாடுகள் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    கடந்த ஜூன் மாதம் வாக்னர் குழு திடீரென ரஷிய ராணுவதிற்கு எதிராக கலகம் செய்து, ஆயுத கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சித்தது. ஆனால், பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு, கலகம் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தார்.

    வாக்னர் குழு பெலாரஸ் செல்வது, ரஷியா அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளாது என ஒப்பந்தும் செய்யப்பட்டது. இதனால் வாக்னர் படையைச் சேர்ந்தவர்கள் பெலாரஸ் வந்துள்ளனர். இதனால் லிதுவேனியா, போலந்து நாடுகள் மேலும் பாதுகாப்பை எல்லையில் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இரு நாடுகள் எல்லையில் பெலாரஸ் ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதனால் மேலும் தங்களது பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    இரண்டு நாடுகளுக்கும் இடையில் ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கலினிங்ராட் பிராந்தியத்தில் ஆத்திரமுட்டும் செயலில் ரஷியா மற்றும் பெலாரஸ் ஈடுபட்டு வருவதாக லிதுவேனியா, போலந்து தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் பெலாரஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டு தங்கள் எல்லைக்குள் அத்துமீறி பறந்ததாக போலந்து குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் பெலாரஸ் அதை மறுத்துள்ளது.

    லிதுவேனியா, போலந்து எல்லையில் அருகே உள்ள கிரோட்னோ மாகாணத்தில் பெலாரஸ் ராணுவப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

    போலந்து லிதுவேனியா எல்லையை இணைக்கும் 96 கி.மீட்டர் நீளம் கொண்ட எல்லைப் பகுதி சுவால்கி என அழைக்கப்படுகிறது. இந்த பகுதி ரஷியா கட்டுப்பாட்டில் இருக்கும் கலினிங்ராட் பிராந்தியத்திற்கும் பெலாரஸ் எல்லைக்கும் இடையிலான பகுதி.

    இந்த பகுதிதான் நேட்டோவுக்கும், ரஷியாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட முக்கிய புள்ளியாக இருக்கிறது. ரஷியா இந்தப் பகுதியை ஆக்கிரமித்தால் லிதுவேனியா, லித்வியா, எஸ்டோனியா போன்ற நேட்டோ உதவி நாடுகளில் இருந்து போலந்து தனியாக பிரிக்கப்பட்டு விடும். இது ரஷியாவுக்கு ஆதாயமாக இருக்கும் என ராணுவ நடவடிக்கை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பால்டிக் கடலில் உள் கலினிங்ராட் பிராந்தியத்திற்கும் ரஷியாவிற்கும் இடையில் நிலப்பரப்பு தொடர்பு கிடையாது.

    • ஆயுத கிளர்ச்சியை தொடங்கிய வாக்னர் குழு தலைவர் பெலாரஸ் சென்று விட்டார்
    • ராணுவ உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே எப்படி தெரியாமல் போனது என புதின் தீவிர விசாரணை

    ரஷியாவில் வாக்னர் குழு எனும் கூலிப்படை அமைப்பு ரஷிய ராணுவம் மற்றும் அதிபர் புதினுக்கு எதிராக ஒரு கலகத்தை தொடங்கியது. இதுபெரும் கிளர்ச்சியாக மாறும் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் இதனை அடக்கி விட்டார். இந்த குழுவின் தலைவர் எவ்செனி பிரிகோசின், பெலாரஸ் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார்.

    தனக்கும், தன் நாட்டிற்கும் எதிரான இக்கலக முயற்சிக்கு காரணம் யார்? என்பதை கண்டறிய புதின், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர், இக்கிளர்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் மறைமுக காரணம் என குற்றஞ்சாட்டி வந்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ. நிறுவனத்தின் இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ், ரஷிய நாட்டின் உளவுத்துறை அமைப்பின் தலைவரான செர்ஜி நரிஷ்கினை அழைத்து அந்நாட்டில் நடந்த அந்த குறுகிய கால கலகத்தில், அமெரிக்காவின் பங்களிப்பு எதுவும் இல்லை என பேசியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

    ரஷ்யாவில் உள்ள எஸ்.வி.ஆர்., வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு (SVR Foreign Intelligence Services) தலைவரான நரிஷ்கினுக்கும், சி.ஐ.ஏ.வின் பேர்ன்ஸிற்கும் இடையேயான தொலைபேசி உரையாடல், இந்த வாரம் நடந்தது. ரஷியாவின் வாக்னர் கலக முயற்சிக்கு பின்னர், இரு அரசாங்கங்களுக்கிடையே நடைபெறும் உயர்மட்ட தொடர்பு இது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை குழுவின் தலைவரான எவ்செனி பிரிகோசின், கடந்த வார ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவருடைய போராளிகள் மாஸ்கோவை நெருங்கியபோது திடீரென அதை நிறுத்தினார்.

    ரஷியாவிற்கு எதிரான வாக்னர் கூலிப்படையினரின் கலகம், அங்கு நடைபெற்ற உள்நாட்டு போராட்டத்தின் ஒரு பகுதி என்றும், அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் அதில் ஈடுபடவில்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் பெலாரஸில் தஞ்சம்
    • ஆயுத கிளர்ச்சி குறித்து ஏன் முன்கூட்டிய அறியவில்லை என்பது குறித்து புதின் விசாரணை

    சென்ற வாரம் ரஷியாவில் வாக்னர் எனும் தனியார் ராணுவ அமைப்பு ரஷிய அதிபருக்கெதிரான கலகத்தை தொடங்கியது. இது பெரும் புரட்சியாக வெடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில், ரஷிய அதிபர் புதின் இந்த கிளர்ச்சியை சாமர்த்தியமாக அடக்கிவிட்டார். அந்த அமைப்பின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷியாவை விட்டு பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைந்திருக்கிறார்.

    தற்போது புதின், வாக்னர் கலகத்திற்கான பின்னணியில் இருந்தவர்களையும், அதனை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க முயற்சி செய்யாதவர்களையும் மற்றும் ஒரு தீர்மானம் இல்லாத மனநிலையில் செயல்பட்ட ராணுவ அதிகாரிகளையும் இனம் கண்டு களையெடுக்க தேவையான உயர்மட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருப்பதாக தெரிகிறது.

    இதனை உறுதி செய்யும் வகையில் ரஷியாவின் மூத்த ராணுவ ஜெனரல்கள் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகிவிட்டனர்.

    ரஷியாவின் உயர்மட்ட ஜெனரல் வாலெரி செராசிமோவ் (67), பொது இடங்களிலோ அல்லது அரசு தொலைக்காட்சியிலோ காணப்படவில்லை. ஜூன் 9 முதல் அவர் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பிலும் குறிப்பிடப்படவில்லை.

    செராசிமோவ் ரஷியா உக்ரைனுடன் நடத்தும் போரில் ரஷிய துருப்புகளுக்கான தளபதியாக செயல்படுபவர். அவரிடம் ரஷியாவின் அணு ஆயுதங்கள் தொடர்பான 3 முக்கிய பெட்டிகளில் ஒன்று எப்போதும் இருக்கும் என்றும் தெரிகிறது.

    அதேபோன்று துணைத்தளபதியும், ஜெனரல் ஆர்மகெடோன் என்ற அடைமொழி உடையவருமான ஜெனரல் செர்ஜி சுரோவிகின் மக்கள் பார்வையில் காணப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகின்றன.

    ஆனால், இவற்றை உறுதி செய்யும் வகையில் ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ செய்திகள் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாக்னர் தலைவர் பெலாரஸ் வந்துள்ளதால் அண்டை நாடுகள் அச்சம்
    • ரஷியா, பெலாரஸ் படையை எதிர்கொள்ள நேட்டோ தயார் நிலையை அதிகரிக்க முடிவு

    வாக்னர் படை ரஷியாவுக்கு எதிராக திரும்பி ஆயுத கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சி செய்தது. ஆனால், ஆயுத கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. வாக்னர் படை தலைவர் பெலாரஸ் சென்றுவிட்டார். வாக்னர் படை மீதான கிரிமினல் வழக்குகளை ரஷிய முடித்து வைத்துள்ளது.

    இந்த ஆயுத கிளர்ச்சி முயற்சியால் ரஷியப் படைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என நேட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

    லிதுவேனியாவில் அடுத்த மாதம் 11 மற்றும் 12-ந்தேதிகளில் நேட்டோ மாநாடு நடைபெற இருக்கிறது. நேட்டோ அமைப்பில் உள்ள தலைவர்கள் சந்திக்க இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று நேட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க், நேட்டோ அமைப்பில் உள்ள 8 நாட்டு தலைவர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது ''ரஷியாவில் ஆயுத கிளர்ச்சி ஏற்பட்டதால், அதன் ராணுவத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். நேட்டோ மாநாடு நடைபெறும்போது ரஷியா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் படைகளை சமாளிக்கும் வகையில் எங்களுடைய தயார் நிலை அதிகப்படுத்தப்படும்.

    எந்தவொரு சாத்தியக்கூறான அச்சுறுத்தலுக்கு எதிராக நோட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு திறன் குறித்து தவறான புரிதலுக்கு இடமில்லை'' என்றார்.

    லிதுவேனியா கிடானாஸ் நவுஸ்தா ''பெலாரசில் வாக்னர் படை குவிக்கப்பட்டால் அண்டை நாடுகளுக்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்'' என்றார்.

    அதற்கு ''யெவ்ஜெனி பிரிகோசின் தலைமையிலான வாக்னர் படை பெலாரஸில் குவிக்கப்படுமா? அவர்கள் என்ன செய்வார்கள்? என்பது குறித்து பேசுவது முன்னதாகவே எடுக்கப்படும் முடிவாகும்'' என்றார் ஸ்டோல்டென்பெர்க்.

    சிறிய ஆயுத கிளர்ச்சி முறியடித்த நிலையில், ரஷிய அதிபர் புதின் தனது படையை விரிவுப்படுத்த வாய்ப்புள்ள நிலையில் கிழக்குப் பகுதியில் தங்களது படைகளை வலுப்படுத்த வேண்டும் என்பதை நேட்டோ தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    ரஷியா உக்ரைன் மீது போர் தாக்குதல் தொடங்கியபோது, நோட்டோ ஸ்லோவாகியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரிய நாடுகளில் தங்களது படைகளை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேவைப்பட்டால் லிதுவேனியாவில் நிரந்தரமாக படைகளை நிறுத்த தயார் என ஜெர்மனி அறிவித்திருந்ததது.

    ×