search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி பதில் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
    • நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு

    மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விரிவான அறிக்கையை இரு அவைகளிலும் சமர்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் என மத்திய மந்திரிகள் தெரிவித்து வருகிறார்கள்.

    என்றாலும், எதிர்க்கட்சிகள் அதை ஏற்றுக்கொள்ளாமல் 4-வது நாளாக அவைகளை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ''மணிப்பூர் விவகாரம் குறித்து அமித் ஷா பேச இருக்கிறார். அதேபோல் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறித்து விவாதிக்க விரும்புகிறோம்'' என்றார்.

    இதற்கிடையே மக்களவையில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் பிரதமர் மோடி மக்களவையில் பேசியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பேசவைக்க எதிர்க்கட்சிகள் இந்த முயற்சியை மேற்கொள்ள இருக்கிறது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தால், அதன்பின் ஆறு மாதங்களுக்கு இதுபோன்று தீர்மானம் கொண்டு வர முடியாது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள போதுமான எம்.பி.க்கள் எண்ணிக்கை பா.ஜனதாவிடம் உள்ளது.

    • மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி நடைபெற இருக்கிறது
    • பொது சிவில் சட்டம், மணிப்பூர் விவகாரம் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும்

    இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறும்.

    பொது சிவில் சட்டம், மணிப்பூர் விவகாரம், டெல்லி மாநில அரசின் அதிகாரத்திற்கு எதிராக கொண்டு வந்துள்ள அவசர சட்டம் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் நிலையில், இரு அவைகளையும் சுமூகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்.

    • ஆகஸ்ட் 10-ந்தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறலாம்
    • டெல்லி மாநில அரசு அதிகாரம் தொடர்பான அவசர சட்டம் தாக்கல் செய்யப்படலாம்

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 10-ந்தேதி வரை கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது.

    மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஓரிரு நாட்களில் தேதியை இறுதி செய்யும். ஜூலை 17 அல்லது 20-ந்தேதி ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றில் தொடங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்றம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் வேலை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இதனால் பழைய கட்டிடத்தில் மழைக்கால கூட்டம் நடத்தப்படலாம் என்பதை புறந்தள்ளிவிட முடியாது.

    இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை, டெல்லி மாநில அரசு தொடர்பான அவசர சட்டம் ஆகிய விவகாரத்தை கையில் எடுக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக டெல்லி மாநில அரசுக்கு எதிரான அவசர சட்டம் அதிர்வலையை ஏற்படுத்தும்.

    மக்களவையில் பா.ஜனதாவுக்கு போதுமான ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில்தான் பா.ஜனதாவுக்கு போதுமான எம்.பி.க்கள் எண்ணிக்கை இல்லை. ஆகவே, கெஜ்ரிவால் பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    ×