என் மலர்
முகப்பு » வீடு சூறை-
நீங்கள் தேடியது "வீடு சூறை-"
- பெர்னார்ட் தாமஸ் கண்டித்தார். இதனால் அவருக்கும் ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட பெர்னார்ட் தாமசின் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மற்றும் வாகனங்களை உடைத்து சூறையாடினர்.
பூந்தமல்லி அடுத்த நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெர்னார்ட் தாமஸ் (78). இவரது வீட்டின் முன்பு குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் 4 பேர் ஆட்டம் போட்டபடி தங்களது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்தனர்.
இதனை பெர்னார்ட் தாமஸ் கண்டித்தார். இதனால் அவருக்கும் ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட பெர்னார்ட் தாமசின் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மற்றும் வாகனங்களை உடைத்து சூறையாடினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கவுதம், ரவிச்சந்திரன், மணிகண்டன், கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
×
X