என் மலர்
நீங்கள் தேடியது "மெட்ரோ பணி"
- மதுரை மெட்ரோ ரெயில் பணிகள் விரிவான திட்ட அறிக்கை தொடர்பான ஆய்வு தொடங்கியது.
- மாசி வீதிகளை அதிகாரி சித்திக் பார்வையிட்டார்.
மதுரை
ஸ்மார்ட் சிட்டியாக மாறி வரும் மதுரை மாநகரில் ரூ. 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மதுரையில் ஒத்தக்கடை, திருமங்கலத்தை இணைக்கும் வகையில் 31 கிலோ மீட்டர் தொலைவுக்கு, திருமங்க லத்தில் இருந்து தோப்பூர், திருநகர், மதுரை கல்லூரி, காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளை யம், கே.புதூர், மாட்டுத்தாவணி, ஐகோர்டு வழியாக ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்ய ப்பட்டுள்ளது. அதற்கான சாத்திய கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை யை தயாரிப்ப தற்கான ஒப்பந்தம் கையெ ழுத்திடப்பட்டது.
அந்த அறிக்கை ஜூலை 15-ந்தேதி அரசிடம் சமர்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவ னத்தை அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை தனியார் நிறுவ னத்திடம் வழங்கி உள்ளது.
இந்த நிலையில் மெட்ரோ ரெயில் மேலாண் இயக்குனர் சித்திக் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள நான்கு மாசி வீதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
ஏற்கனவே திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் பரிசோத னையும், போக்குவரத்து சோதனையும் நடத்தப் பட்டுள்ளது.
மேலும் நில எடுப்பு நில அளவை உள்ளிட்ட பணி களும் நடைபெற்று உள்ளது. குறிப்பாக அரசு நிலங்கள், பணிகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நிலங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
மதுரை நகரின் மைய பகுதிகளில் பூமிக்கு அடியில், திருமங்கலத்தையும், ஒத்தக்கடையையும் இணைக்கும் வகையில் அமைய இருக்கும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டமா னது, மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன் செயல் படுத்தப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
- கிளாம்பாக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் புதிய பஸ் நிலையம் தொடங்கப்பட்டது.
- பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருவதற்கு சிறந்த வழி விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தை செயல்படுத்துவது தான்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கிளாம்பாக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட புதிய பஸ் நிலையம், சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாமல் கடுமையான நெருக்கடிகளையும், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருவதற்கு சிறந்த வழி விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தை செயல்படுத்துவது தான்.
கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைப்பது என முடி வெடுக்கப்பட்ட போதே, ஏற்கனவே விமான நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ தொடர்வண்டிப் பாதையை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுவிட்டன. எனவே, விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டிப் பாதை அமைக்கும் பணிகளை தொடங்கி விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மெட்ரோ பணியின் காரணமாக பள்ளம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது.
- உடனடியாக பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை:
சென்னை வடபழனியில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையாக இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் இன்று காலை திடீரென பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.
வடபழனி கோவிலில் இருந்து கோடம்பாக்கம் செல்லக்கூடிய பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்திற்கு முன்பாக தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சீர்செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணியின் காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து மிகுந்த சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்துள்ளனர். இதனால் உடனடியாக பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- கொரோனா காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டதே தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.
- சென்னை போன்ற பெருநகரங்களின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,
சென்னையில் வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது சென்னையில் உள்ள 200 வார்டுகளில் சராசரியாக ஒரு வார்டில் 40,000 பேர் கூடுதலாக வசிக்கின்றனர். வார்டுகள் எண்ணிக்கையை அதிகரித்து மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700ஆக உயர்த்தப்பட உள்ளது. தற்போது 138 நகராட்சிகள் உள்ள நிலையில் 159ஆக உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் அடுத்த 20 நாட்களில் மேலும் 4 மாநகராட்சிகள் உருவாக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சித் துறைகளில் 3000 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
தெருநாய் பிரச்சனைகளில் இருந்து மக்களை காக்கும் பணியை அரசு மேற்கொள்ளும். கொரோனா காலத்தில் கண்காணிப்பு இல்லாமல் விடப்பட்டதே தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். தெருநாய்களுக்கு கருத்தடைசெய்யப்படுவதன் மூலம் நாய்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும்.
சென்னை மாநகரில் மழைக்காலங்களில் நீர் தேங்க மெட்ரோ திட்ட பணிகளே காரணம்.
சென்னை போன்ற பெருநகரங்களின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். மாடுகள் முதன்முறை பிடிபட்டால் ரூ.5,000, 2-ம் முறை பிடிபட்டால் ரூ.10,000, 3-ம் முறை பிடிபட்டால் ஏலம் விடும்படி சட்டம் கொண்டு வரப்படும்.
கலைஞர் நூற்றாண்டு விழாவின் தொடர்ச்சியாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ரூ.75 கோடி செலவில் புதிய மாமன்ற கூடம் கட்டப்படும் என்றார்.
- கிரேன் அருகிலுள்ள கட்டிடத்தின் மீது விழுந்தது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது.
- கிரேன் விழுந்த அந்த பங்களாவில் ஆள் இல்லை மற்றும் அது ஏற்கனவே விற்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் மெட்ரோ கட்டுமான பணியின்போது ஒரு கிரேன் அருகிலுள்ள கட்டிடத்தின் மீது சரிந்தது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மெட்ரோ ரெயில் பணியின்போது குழுவினர் கிரேனை பயன்படுத்தி ஒரு பொருளை தூக்கும்போது, கிரேன் கட்டிடத்தின் மீது விழுந்தது என்று தீயணைப்பு அதிகாரி ஹர்திக் படேல் கூறினார்.
கிரேன் அருகிலுள்ள கட்டிடத்தின் மீது விழுந்தது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதிர்ஷ்டவசமாக, கிரேன் விழுந்த அந்த பங்களாவில் ஆள் இல்லை மற்றும் அது ஏற்கனவே விற்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- மாதவரம்- ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பணி வேகமாக நடந்து வருகின்றன.
- மேலும் வரும் மே 31-ந்தேதிக்குள் காலி செய்யவில்லை எனில் அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து ரூ.63,246 கோடி மதிப்பில் 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி நடைபெறுகிறது.
இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ., மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கு என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதில் மாதவரம் பால்பண்ணை- சோழிங்கநல்லூர் ரெயில் பாதை திட்டத்தில் ஒரு பகுதியான மாதவரம்- ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பணி வேகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் மெட்ரோ பணிக்காக சென்னை மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை காலி செய்து கொடுக்க அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி லட்சுமி உள்ளிட்ட 3 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ரோ பணிக்காக சென்னை மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க வேண்டும்.
மேலும் வரும் மே 31-ந்தேதிக்குள் காலி செய்யவில்லை எனில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
- கூடுதல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- 9 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகிறது.
சென்னை:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி 116.1 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடி செலவில் 3 வழித் தடங்களில் அமைக்கப்பட உள்ளது. இதில் மாதவரம் பால்பண்ணை-சிறுசேரி வரை 45.4 கி.மீட்டர், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீட்டர், மாதவரம்-சோழிங்க நல்லூர் வரை 44.6 கி.மீட்டர் தூரத்திற்கு பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகின்றன. இந்த 2-ம் கட்ட திட்டத்தில் முதல் பாதை பூந்தமல்லி -போரூர் வழித்தடம் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
9 கி.மீட்டர் நீளத்தில் உள்ள இந்த வழித்தடத்தில் போரூர் புறவழிச்சாலை, தெள்ளியகரம், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன் சாவடி, கரையான் சாவடி, முல்லைத்தோட்டம், பூந்தமல்லி, பூந்தமல்லி புறவழிச்சாலை என மொத்தம் 9 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகிறது.
இதில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களான கரையான்சாவடி மற்றும் குமண்னசாவடியில் மெட்ரோ பணிகளில் பல்வேறு தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது சவாலாக மாறி உள்ளது.
குறிப்பாக காட்டுப்பாக்கம் பகுதியில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இதே போல் கரையா்னசாவடி, குமணன்சாவடியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் உயரத்தில் நிலையங்கள் கட்டப்படுகின்றன. இந்த பணி சவாலாக மாறி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறும்போது, கரையான்சாவடி, குமணன்சாவடியில் மெட்ரோ ரெயில் பணிகள் சவாலாக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும். கடந்த ஆண்டுமுதல் கூடுதல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.