search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல் நீட்டிப்பு"

    • எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.
    • பாம்பன் மீனவர்கள் 25 பேரும் இன்று காலை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 1-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதிகாலையில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டு படகுகளையும் சுற்றி வளைத்தனர்.

    பின்னர் எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்தது.

    இதையடுத்து பாம்பன் மீனவர்கள் 25 பேரும் இன்று காலை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    • சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி ஓராண்டு நிறைவு.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக நீட்டிக்கப்பட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 19ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி ஓராண்டாகியுள்ள நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் நீட்டிப்பு.
    • புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நீதிமன்ற காவலை ஏப்ரல் 17ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி மாதம் 20ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    • செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட 14 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது.
    • காணொலி காட்சி வாயிலாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார்.

    சென்னை:

    தமிழக மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

    அப்போது 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த பணத்தை செந்தில் பாலாஜி திருப்பி கொடுத்துவிட்டார்.

    இதையொட்டி புகாரை வாபஸ் பெற ஏற்பாடுகள் நடந்தது. ஆனாலும் இந்த வழக்கு கோர்ட்டுக்கு சென்ற போது சட்ட விரோதமாக லஞ்சம் பெறப்பட்டதால் இதை சும்மாவிட முடியாது. வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறிவிட்டது.

    அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இதில் நடைபெற்ற முறைகேடு, சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அடையாறில் உள்ள வீட்டில் வைத்து கடந்த 14-ந்தேதி கைது செய்தனர்.

    அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதித்து அதன் பிறகு காவேரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்து அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

    இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் காணொலி காட்சி வாயிலாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.

    அப்போது நீதிபதி அல்லி, எப்படி இருக்கிறீர்கள்? என செந்தில்பாலாஜியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு இன்னும் வலி இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.

    இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ×