search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடம்பர தேர்பவனி"

    • ஆடம்பர தேர்பவனி விழா விமர்சையாக நடை பெற்றது.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதி கோயில் அண்ணா சிலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 128-ம் ஆண்டு ஆடம்பர தேர்பவனி திருவிழா நடைபெற்றது.

    விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி விழா விமர்சையாக நடை பெற்றது.

    இதையொட்டி, பங்குதந்தை சேவியர், உதவி பங்குத்தந்தை பெல்பிட் ஆண்டனி முன்னிலையில், சிறப்பு கூட்டுப்பாடல், திருப்பலி ஆகியவை நடந்தது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட மின்வி ளக்குகளாலும், மலர்களாலும் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்ட ஆடம்பர தேர் புனிதம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    தொடர்ந்து வாணவேடி க்கையுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில், பசுபதிகோயில் புனித அந்தோணியார் ஆலயத்தின் அருள் தந்தை யர்கள், அருட்சகோதரிகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவி ற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    ×