என் மலர்
நீங்கள் தேடியது "வீடு கருப்பு கொடி"
- அரசு ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி அருகே மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- மின்மயானம் நம்பியூரில் இருந்து செல்லும் எலத்தூர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த காமராஜர் காலனியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி அருகே மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மின்மயானம் நம்பியூரில் இருந்து செல்லும் எலத்தூர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் இங்கு மின்மயானம் கட்டினால் சுகாதார சீர்கேடும் ஏற்படும் என்று கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த திட்டம் கைவிடவில்லையென்றால் பல்வேறு போரட்டங்கள் நடத்தபடும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.