search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்ஆதாரம்"

    • நீர் ஆதாரம் மேம்பட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடை பெற்றது. தலைவர் திசை வீரன், கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    ஒரு மாவட்டத்தின் வளர்ச்சி என்பது அந்த மாவட்டத்தில் பணி புரியக்கூடிய அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து பணிபுரிந்தால் அந்த மாவட்டமானது வளர்ச்சி பெறும். அவ்வாறு செயல்படுவதற்கு திட்டக்குழு அவசியமான ஒன்றாகும்.

    நம்முடைய மாவட்டத்தை பொறுத்தவரையில் குடிநீர் மட்டுமே பற்றாக்குறையாக இருந்து வருகிறது. அந்த பற்றாக்குறையை போக்கு வதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றது.

    தண்ணீர் சீராக கிடைத்திடும் பட்சத்தில் விவசாயம் மேம்படும், சட்டம் ஒழுங்கு சீராக அமை யும்,முதல்-அமைச்சரின் அறிவுறுத்த லின்படி குடிநீர் சீராக கிடைத்திடும் பொருட்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தை துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. அந்த குடிநீரானது கரூரி லிருந்து கொண்டு வரப்படு கிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் குடிநீரை எவ்வாறு வீணாகாமல் உபயோகிப்பது என திட்டக்குழு உறுப்பினர்கள் திட்டங்கள் வகுக்க வேண்டும். அவ்வாறு திட்டங்களை வகுக்கும் பட்சத்தில் குடிநீர் பற்றாக்குறை என்பது ஏற்படாது.

    குடிநீர் வீணாக்காமல் நீங்கள் இருக்கும் பகுதியில் உள்ள குடிநீர் செல்லக்கூடிய கால்வாய்கள், குளங்கள் அனைத்தையும் தண்ணீரை சேமிப்பதற்கு உரிய நட வடிக்கைகளை திட்டக்குழு உறுப்பினர்கள் மேற் கொள்ள வேண்டும். புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூ டிய திட்டக்குழு உறுப்பி னர்கள் திட்டங்களை வகுக்கின்ற போது தங்கள் பகுதிகளில் நீர் ஆதார மேம்பட திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×