என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிடிபட்டனர்"
- 5 பேர் கொண்ட கும்பல் கிப்சன் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து தாக்கினார்கள்.
- காயமடைந்தவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே முதலார் பகுதியை சேர்ந்தவர் கிப்சன் (வயது 19). இவர் நாகர்கோவில் கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 16-ந்தேதி கிப்சன் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கிப்சன் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து தாக்கினார்கள். இதில் கிப்சன் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கிப்சன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து நேசமணிநகர் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கிப்சனை தாக்கியவர்கள் குறித்த கும்பல் அடையாளம் தெரிந்த நிலையில் போலீ சார் 3 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 3 பேரிடம் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. கிப்சனை எதற்காக தாக்கினார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.