search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெயின் அருவி"

    • சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.
    • காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாகவும் கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீரானது வினாடிக்கு 5,208 கன அடியில் இருந்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 576 கன அடியாக அதிகரித்து உபரி நீரானது வெளியேற்றப்பட்டதாலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இந்த நீரானது நேற்று தமிழக-கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வர தொடங்கியது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,500 கன அடியாக இருந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீராலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இன்றும், நாளையும் பள்ளிகள், கல்லூரிகள் தொடர் விடுமுறை காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.

    அவர்கள் பரிசலில் சென்று சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி, செங்கோட்டை, புளியரை, மேலகரம், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்தது.

    மலைப்பகுதிகளிலும் மழை பெய்ததன் காரணமாக குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அபாய ஒலி எழுப்பப்பட்டு மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இன்று காலையில் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் அங்கு தண்ணீர் மேலும் அதிகரித்ததால் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் உடனடியாக அப்புறப்படுத்தப் பட்டனர்.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிற்றருவி மற்றும் புலியருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    பிரதான அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். 

    • ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.
    • ரம்யமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.

    அதன்படி தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தென்காசி மாவட்டத்திலும் அவ்வப்போது சாரல் மழை ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் ரம்யமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    குறிப்பாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீர் மிதமாக விழுந்து வரும் நிலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்தால் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    • சாரல் மழையும் பெய்து ‘குளு குளு’ சீசன் நிலவுகிறது.
    • தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடங்கினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் சீசன் களை கட்டும் .

    அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளுக்கு குளிக்க வருவர்.

    இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருவதோடு அவ்வப்போது சாரல் மழையும் பெய்து 'குளு குளு' சீசன் நிலவுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலையில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி மற்றும் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது .

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை ஒலி கருவியை பயன்படுத்தி அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை போலீசார் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர்.

    இருப்பினும் சிறிது நேரத்தில் மீண்டும் தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளிக்க தொடங்கினர்.

    இன்று காலையில் ஐந்தருவி மற்றும் மெயின் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வமுடன் குளித்தனர்.அருவிகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு பகுதி, பகுதியாக குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அருவிக்கரையில் போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மெயின் அருவி கரையில் ஆண்கள் குளிக்க செல்லும் பகுதியில் தரைத்தளம் சீரமைக்கப்படும் பணிகள் காரணமாக அந்த வழியே யாரும் அனுமதிக்கப்பட வில்லை. அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை முதல் அந்த வழியே மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.

    குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருப்ப தாலும், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதாலும் குற்றாலத்தில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மலைப்பகுதியில் மழை குறைந்ததால் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வரத்து குறைந்தது.
    • மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அந்த அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை வரை தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

    இந்நிலையில் இன்று காலையில் மலைப்பகுதியில் மழை குறைந்ததால் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வரத்து குறைந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அந்த அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    2 அருவிகளிலும் இன்று பிற்பகலில் தண்ணீர் வரத்து குறையும்பட்சத்தில் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததை அடுத்து அங்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இரவில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியது. அதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே இன்று பிற்பகலில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததை அடுத்து அங்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இன்று சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் குளிக்க உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    • அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தடை விதிப்பதும், பின்னர் தண்ணீரின் அளவு சீராகும் போது அனுமதிப்பதும் தொடர்ந்து வருகிறது.
    • நேற்று நள்ளிரவு முதல் பெய்து வந்த சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தென்காசி:

    குற்றால சீசன் இந்த ஆண்டு தாமதாக தொடங்கிய நிலையில், தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் சீசன் தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வந்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் உட்பகுதிகளில் பெய்து வரும் மழையினால் அருவிகளில் சில நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிப்பதும், பின்னர் தண்ணீரின் அளவு சீராகும் போது அனுமதிப்பதும் தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வந்த சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றாலம் வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் பழைய குற்றால அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். நேரம் செல்ல செல்ல பழைய குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    • உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், அண்டை மாநிலம் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் முகாமிடுவார்கள்.
    • மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சீசன்களை கட்டும்.

    அப்போது குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், அண்டை மாநிலம் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் முகாமிடுவார்கள்.

    இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் இன்னும் பொழியாததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் உட்பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மலை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு மட்டும் தண்ணீர் வரத்து தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

    அருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அருவியில் குளிக்க வந்த பயணிகள் அனைவரையும் வரிசையில் நின்று குளித்து செல்ல அறிவுறுத்தினர்.

    ×