என் மலர்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து ஆஸ்திரேலியா தொடர்."
- இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ஆஸ்திரேலிய அணியின் கவாஜா 2-வது இன்னிங்சில் 77 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 100.4 ஓவர்களில் 416 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆலி ராபின்சன், ஜோஷ் டங்கு தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 76.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் டக்கட் 98 ரன்னும், ஹாரி புரூக் 50 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
4-வது நாளான இன்று தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கவாஜா 77 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.