என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது பல்கலைக்கழக"

    • மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் உள்ள இளநிலைப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அண்மையில் நடத்தியது.
    • இந்த தேர்வை சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் எழுதியுள்ளனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு ஜூன் 29-ம் தேதி வெளியிடப்பட்டது.

    சேலம்:

    மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் உள்ள இளநிலைப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அண்மையில் நடத்தியது.

    இந்த தேர்வை சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் எழுதியுள்ளனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு ஜூன் 29-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் பல கேள்விகளுக்கான விடைகள் தவறாக குறிக்கப் பட்டுள்ளதாகத் தேர்வர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    குறிப்பிட்ட வினாவுக் கான விடை குறித்து முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு வினாவுக்கும் தலா ரூ.200 செலுத்த வேண்டும் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.

    இதற்கு தேர்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர். கட்டணம் அதிகமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் கூறுகையில், என்டிஏ முறையின்றி கட்டணம் வசூலிப்ப தாகக் கூறுவது தவறான குற்றச்சாட்டு. அந்த அமைப்பு லாப நோக்க மற்று இயங்கும் தன்மை உடையது. வசூலிக்கப்படும் கட்டணமா னது விடையை மறுமதிப்பீடு செய்யும் நிபுணர்களுக்கே வழங்கப்படும்.

    விடைக் குறிப்பில் தவறு கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. தட்டச்சு செய்வ தில் ஏற்பட்ட பிழையாக அது இருக்கலாம். திருத்தப் பட்ட விடைக்குறிப்பு 2 நாள்களுக்குள் வெளியிடப் படும்.

    விடைக் குறிப்பில் தவறுகள் ஏதேனும் இருந்தால், அது தொடர்பாக என்டிஏ-வுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தேர்வர்கள் தெரிவிக்கலாம். அக்கருத்து ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தால், அது நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்றார்.

    ×