search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபை போதகர்"

    • போலீசார் விசாரணை
    • சபை போதகர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    களியக்காவிளை:

    களியக்காவிளை அருகே பொன்னப்பநகர் பகுதியை சேர்ந்தவர் சோபனம். இவர் கிறிஸ்தவ சபையில் போதகராக பணியாற்றி கடந்த 3 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்று விட்டார். திருமணமாகாத இவர், பொன்னப்பநகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை சோபனம் வீட்டுக்கு அவரது தம்பி ரசல்ராஜ் வந்துள்ளார். வீடு பூட்டி இருந்ததால், அவர் வெளியில் நின்று சத்தம் கொடுத்துள்ளார். ஆனால் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ரசல் ராஜ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

    அப்போது அங்கு சோபனம் இறந்த நிலையில் காணப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இதுகுறித்து களியக்காவிளை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக குழித் துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ரசல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சபை போதகர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • ரூ.10 லட்சம் கேட்டதற்கு அதையும் கொடுக்கவில்லை

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜின் குமார் (வயது 36), ஆட்டோ டிரைவர். இவருக்கு சந்தியா (34) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சந்தியா, பாகோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஆனால் இவர்களுக்குள் விவாகரத்து ஆகவில்லை. அவர் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் விஜின் குமார் தனது மனைவிக்கு தெரியாமல் 18 வயது இளம் பெண் ஒருவரை 2-வது திருமணம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தியா, தனது குழந்தைகளை அழைத்து சென்று கணவர் 2-வது திருமணம் செய்தது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதனால் ஆத்திரம் கொண்ட விஜின் குமார் ஏற்கனவே உனது பெற்றோரிடம், உனக்குச் சொந்தமான சொத்துக்களை எழுதி கேட்டேன். ஆனால் அவர்கள் தரவில்லை, மேலும் ரூ.10 லட்சம் கேட்டதற்கு அதையும் கொடுக்கவில்லை, எனவே நீ எனக்கு தேவையில்லை என 2-வது திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெட்டுக்கத்தியால் வெட்டவும் முயன்றுள்ளார்.

    இதனால் பயந்து போன சந்தியா அங்கிருந்து தப்பிச் சென்று மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரின் பேரில் விஜின்குமார், 2-வது திருமணத்தை நடத்தி வைத்த ஈத்தவிளை சபை போதகர் பிரின்ஸ், உடந்தை யாக இருந்த களியலை சேர்ந்த சிவகுமார், சுரேஷ் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த 4 பேரும் கேரளாவில் தலைமறைவாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அந்த 4 பேரையும் கைது செய்ய போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    ×